|
இவ்வாறு
தனக்கு வழங்கிய ஆசியின் நலத்தால் உயர்வடைந்த சூசை,
நன்மைத் தன்மையில் பிரிவு இல்லாது ஒன்றாய் அமைந்து, பெருகிய
செல்வங்களுக்கெல்லாம் உரிய ஒரே கடவுளாய் வழங்கும் மூன்று
ஆட்களையும் வணங்கி, "சொரிந்த நலங்களால் உங்கள் வலிமையைக்
காட்டவென்று, பிழைகளுக்கு உரிய இவ்வடியவனைக் கருணையோடு
நோக்கி, ஒடுங்கிய என் சிறுமை பெருமையடைச் செய்தமையால்,
உங்களுக்கே தொழுகை உரியதாம்!" என்று கூறித் தாழ்ந்தான்.
சூசையால்
விளையும் நலங்கள்
தேமா,
கூவிளம், கூவிளம், கூவிளங்காய்
| 44 |
அன்னா னன்றடை
யன்னவ ரங்களினா
லுன்னா வண்ணம ருந்தயை யோம்பிவழாப்
பொன்னா னுறுல கிற்புக வுய்த்தவுயி
ரென்ன லீங்கள வேற்றுவ தேலுவதோ. |
| |
அன்னான் அன்று
அடை அன்ன வரங்களினால்,
உன்னா வண்ணம் அருந் தயை ஓம்பி, வழாப்
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர்,
என்னால் ஈங்கு அளவு ஏற்றுவது ஏலுவதோ? |
அத்தகையவன்
அன்று அடைந்த அவ்வரங்களினால், நினைத்தற்கரிய
வண்ணம் அரிய தயவோடு பேணி, குற்றமற்ற பொன் மயமாய்த் தோன்றும்
மோட்ச உலகில் புகுமாறு கொண்டு சேர்த்த உயிர்கள், அடைந்த
தன்மைகளின் அளவை என்னால் உயர்த்திக் கூறுவது இயலுமோ?
| 45 |
தாயே யொக்கவ
ருந்தயை யொக்குமறா
நோயே யொக்கம ருந்திணை யொக்குநுழை
பேயே யொக்கவ ரண்பிணை வொக்குமுயிர்
மீயே யொக்கவி டாத்துணை யொக்குமிவன். |
| |
தாயே ஒக்க,
அருந் தயை, ஒக்கும்; அறா
நோயே ஒக்க, மருந்தினை ஒக்கும்; நுழை
பேயே ஒக்க, அரண் பிணைவு ஒக்கும்; உயிர்
மீயே ஒக்க, விடாத் துணை ஒக்கும், இவன். |
|