பக்கம் எண் :

114இலக்கணக் கொத்து 

ஆசிரியனுக்கே இது வேண்டும் எனின், மாணாக்கருக்கு இது வேண்டும் என்பது சொல்லாமலேயே தெரிந்துகொள்ளப்பட வேண்டியதாம்.]

10சொல்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன்
அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக.

பிணி வறுமை ஆதிகளது இன்மையும் பொருள் இளமை ஆதிகளது உடைமையும் கற்றற்குக் கருவியாயினும், மிகவும் சிறந்த கருவி ஆரியன் கருத்தில் அருள்வர நடத்தலே என்பது தோன்றக் கேட்டு என்னாது ‘ஒழுகி’ என்றாம். பொருள் என்னும் பெயர் பொதுவாயினும், கல்விப் பொருளை மாத்திரம் அங்ஙனம் கூறாது, நற்பொருள், பெரும்பொருள், அரும்பொருள், குறையாப் பொருள், துணைப்பொருள், நீங்காப்பொருள், கேடில்பொருள், விளக்கும்பொருள், விழுமியபொருள் முதலாக யாதானும் ஓர் அடைகொடுத்தே கூறுவர்.

‘கேடில் விழுச்செல்வம் கல்வி’                                         கு.-400

எனச் சிறுபான்மை பலஅடை கொடுத்தும் கூறுவர். அக்கருத்துப் பண்டை நூல்கள் எல்லாவற்றினுள்ளும் காண்க. அந்நியமம் மறந்தும் தப்பார்கள் என்பது தோன்ற ‘அரும்பொருள் பெறுக’ என்றாம்.

கலித்தொகையில் ஒரு காரணம் நோக்கி நிதிப்பொருளைக் ‘கேடில் விழுச்செல்வம்’ என்றார். இவ்வடை கல்விக்கு உரித்தன்றிப் பிறவற்றிற்கும் உரித்தோ என்பாரை நோக்கி வழுவமைத்தார் நச்சினார்க்கினியர். இதனாலும் அடை உரிமை காண்க.

[வி-ரை: கல்வியைப் பிணியும் வறுமையும் கெடுக்கும்; செல்வமும் இளமையும் வளர்க்கும். மாணாக்கனுக்கு மிகஇன்றி யமையாதது ஆசிரியன் கருத்தின்வழி நடத்தல்.

‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்(கு)
எழுமையும் ஏமாப்(பு) உடைத்து’                                        கு.-398