| வேற்றுமையில் - நூற்பா எண். 48-50 | 175 |
இல் என்பது ஐந்தன் உருபு; அது இல் என்ற ஏழன் உருபின் வேறுபட்டது. இரண்டும் வடிவில் ஒன்று; பொருளில் வேறு. மலையில் வீழ் அருவி-இல்-ஐந்தன் உருபு நீக்கப் பொருளில் வந்தது. மலையில் இருந்தான் - இல் - ஏழன் உருபு இடப்பொருளில் வந்தது. ஒவ்வொரு வேற்றுமைக்கும் சிறப்பான உரிமைப் பொருள் கூறப்பட்டது. ஐந்தன் உருபும் ஏழன் உருபும் ஆகிய இல் - வடிவால் ஒன்று; பொருளால் வேறு. மூன்றாவதற்கும் ஐந்தாவதற்கும் வரும் ஏது பொருளால் ஒன்று; உருபால் வேறு - எனக் கொள்க.] தடுமாறு உருபுகள் 61 | தடுமாறு உருபுகள் தாம்சில உளவே. |
எ-டு: அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். -கு. 167 என்புழி ஒவ்வொரு நிலைக்களத்தும் ஐயுங் குவ்வும் பொருந்தும். [வி-ரை:உடையானைத் தவ்வைக்குக் காட்டிவிடும்; உடையானுக்குத் தவ்வையைக் காட்டிவிடும்; என்று உருபுகள் இடம் மாறி வருதல் காண்க.] 49 உருபு நோக்கிய சொல் பற்றிய வரையறை 62 | ஒன்றே வந்தும் இரண்டே வந்தும் ஒன்றும் இரண்டும் உறழ்ந்தே வந்தும் உருபுநோக் கியசொல் ஒருமூ வகையாம்.
|
|