எ-டு: பாலைக் குடித்தான் (ஒன்றே வந்தது); பாலைத் தயிராக்கினான்; குடும்பத்தைக் குற்றம் மறைத்தான்; அரிசியால் சோறாக்கினான்; மருகனுக்கு மகட் கொடுத்தான்; - எனவரும். இவற்றின்கண் உருபு நோக்கிய சொல் இரண்டாகியவாறு ஆகாயத்தின்கண் பருந்து, ஆகாயத்தின்கண் பறந்த பருந்து; குன்றின்கண் குவடு, குன்றின்கண் இருந்த குவடு; மெத்தைக்கண் அரசன், மெத்தைக்கண் கிடந்த அரசன்; வழிக்கண் தூதன், வழிக்கண் நடந்த தூதன்; -என வரும். இவற்றின்கண் ஒரு கால் ஒன்றும் ஒரு கால் இரண்டும் முடிக்கும் சொல்லாக வந்தவாறு. 50 உருபு நோக்கிய சொல் பல பொருள் படுதல் 63 | உருபுநோக் கியசொல் பலபொருள் படுதலை முன்னோர் பலரும் மொழிந்தனர் விரியா; இந்நூ லிற்சிறி தாயினும் இயம்பிலன்.
|
[வி-ரை: உருபை முடிக்கும் சொல் பற்றித் தொல்காப்பியனார் நன்னூலார் முதலாயினார் விரித்துக் கூறினமையின், அவற்றைப் பற்றி இந்நூலுள் குறிப்பிடவில்லை என்பது. ‘காப்பின் ஒப்பின்’ தொ.சொ.72. ‘இரண்டாவதன் உருபு ஐ’ ந. 296 முதலியன காண்க.] |