பக்கம் எண் :

254இலக்கணக் கொத்து 

‘ஆவயின் வரூஉம் வல்லெழுத்து மிகுதி’ 

‘ஆவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே’                             - தொ. எ. 34

‘இன்என வரூஉம் வேற்றுமை உருபிற்கு’                          - தொ. எ. 131

‘ஏவலின் வரூஉம் எல்லா ஈற்றவும்’                                  - ந. 335

‘வடிவின் அளவின் வண்ணத்தின் வரூஉம்’

எனவும்,

‘விராஅய்ச் செய்யாமை’                                        - நாலடி. 246

‘கழா அக்கால்’                                                - குறள். 840

‘குன்று முட்டிய குரீ இப் போலவும்

‘பரீஇ உயிர்செகுக்கும்’                                         - நாலடி. 220

எனவும் வருவன எல்லாம் குற்றெழுத்து. இவ்விதி பெரும்பான்மையும் விளிமரபு சூத்திரங்களால் காண்க. ஏனை ஐந்தும் வெளிப்படை.

[வி-ரை இயற்கையளபெடை ஆவியும் ஒற்றும்’ - ந. 101 என்ற நன்னூல் நூற்பாவிலும், அளபிறந்து உயிர்த்தலும்’ - தொ. எ. 38 என்ற தொல்காப்பிய நூற்பாவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கையளபெடை ‘இசைகெடின் மொழி முதல்’ ந, 91 என்ற நன்னூல் நூற்பாவிலும், ‘குன்றிசை மொழி வயின்’ தொ. எ. - 41 ‘ஐ ஒள என்னும்’ தொ,எ.- 42 என்னும் தொல்காப்பிய நூற்பாக்களிலும் சுட்டப்பட்டுள்ளது.

எழுத்துப் பேறளபெடை நன்னூலில் குறிப்பிடப்படவில்லை தொல்காப்பியத்தில் ‘உம்மை எஞ்சிய’ குறியதன் முன்னரும்’ ‘குற்றெழுத்திம்பரும்’ ஏ என் இறுதிக்கு’ வேற்றுமை ... ... ... ... ஒகரம் வருதல் ஆவயினான’ - தொ. எ. 223, 26, 67, 77, 92, என்ற நூற்பாக்களில் விளக்கப்பட்டுள்ளது.

ஒற்றுப்பேறளபெடை ‘ஙஞண நமன’ ந - 92 என்னும் நன்னூல் நூற்பாவிலும் ‘ஒற்றளபெடுப்பினும்’ தொ. பொ. - 330 என்னும் தொல்காப்பிய நூற்பாவிலும் குறிக்கப்பட்டுள்ளது.