| ஒழிபியல் - நூற்பா எண். 4 | 255 |
குற்றெழுத்தளபெடை ‘மூவள பிசைத்தல்’ தொ. எ. - 5 ‘நீட்டம் வேண்டின்’ தொ. எ. - 6 ‘ழகர உகரம்’ தொ. எ. - 261 என்ற தொல்காப்பிய நூற்பாக்களால் பெறப்படுகிறது. பழு - பழூஉ என்பன போலாவாய், விரவி - விராஅய், கழுவா - கழாஅ, குருவி - குரீஇ எனத்திரிந்து அளபெடுத்தலின் வேறு கூறப்பட்டன. விளிமரபில் ‘அளபெடை மிகூஉம்’ (தொ. சொ. 225) ‘அளபெடைப் பெயரே’ (தொ.சொ.135,41,49,) என்ற நூற்பாக்களை நோக்குக. இனி, பிரயோகவிவேக நூலார் ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் (தொ.எ. 41) என்னும் சூத்திரவிதி செயற்கை அளபெடைக்கல்லது இயற்கை யளபெடைக்குப் பொருந்தாமை தெற்றென அறிக. இயற்கை யளபெடைக்கு வடநூலால் சொன்ன வண்ணமேயாம். ‘அளபு’ இறந்து உயிர்த்த (தொ. எ. 33) என்னும் சூத்திரவிதி சிறுபான்மை பொருந்தில் பொருந்தும் என்க. இரண்டு மாத்திரையாய்ப் பிறந்த நெட்டெழுத்துக்கள் மூன்று மாத்திரையாய் அளபெடுத்தலும் செயற்கையாம் ஆதலின், ‘சிறுபான்மை’ என்றாம். உவாஅப்பதினான்கு, இராஅப்பகல் என்னும் எழுத்துப்பேறுகள் ‘குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்’ காரியம் இல்வழி வந்த புலுதசந்தி - வடமொழியிலும் ‘அக்கிநீ இஇஇ-இதி என வரும். இனி, வடநூலார் குறில் தனியே ஒரு மாத்திரையாய்ப் பிறப்பதோரெழுத்தும், நெடில் தனியே இரண்டு மாத்திரையாய்ப் பிறப்பதோரெழுத்துமானாற்போலப் புலுதமும் தனியே மூன்று மாத்திரையாய்ப் பிறப்பதோரெழுத்தென்று கூறி, வேதத்துள் சந்தோபங்கம் வாராமல் குறில் நின்ற இடத்தும் நெடில் நின்ற இடத்தும் புலுதம் ஆதேசமாக வருவதல்லது குறிலும் நெடிலும் போலப் பொருள் வேறுபடுக்க வாராதென்றும், உலக வழக்கில் சம்புத்தி சம்போதனத்தில் வரும் என்றும், சுலோக பதமான சம்புத்தியில் குறிலும் நெடிலும் இயல்பாய் நிற்கும் என்றும், சேய்மைவிளியிலே தாளஓசை மணியோசை என்கின்ற அநு கரணத்தொனி போலும் என்றும் கூறுவர். அவர் குறில் நின்றவிடத்தும் புலு தம் வரும் என்பது பற்றித் தொல்காப்பியர். |