பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 5257

போலி எழுத்து

91போலி எழுத்தைப் போற்றுதல் கடனே

என்றது ஈரெழுத்துக்கள் கூடி ஓரெழுத்துப் போல வருவன-வற்றைத் தள்ளாது கொள்ளுக என்றவாறு; தள்ளில்,

‘ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும’                      - தொ. எ. 56

‘ஐயந் தீரப் பொருளை உணர்த்தலும்
மெய்ந்நடு நிலையும் மிகும்நிறை கோற்கே’                             - ந. 29

‘கையி னால்சொலக் கண்ணினில் கேட்டிடும்
மொய்கொள் சிந்தையின் மூங்கையும் ஆயினேம்’                    - சீவக. 104

‘கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி’                         - சிலப் 13-91,2

‘ஒளவிய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்’                                          - கு. 169

இவைபோல வரும் செய்யுளெல்லாம் மோனைத்தொடையோடும் எதுகைத்தொடையோடும் மாறுபட்டு இலக்கண வழுவாதல் காண்க.

வடநூலார் இவ்விலக்கணத்தைத் தள்ளாது சமானாக்கரம் என்று பெயரிட்டு இவ்விரண்டனையும் தழுவினார். அதுபற்றித் தமிழ்நூலார் இணைஎழுத்து என்று மொழிபெயர்க்க மறந்து போலிஎழுத்து என்று மொழிபெயர்த்ததனால், போலிச் சரக்கு போலி இலக்கணம் - போலியுரை என்னும் சொற்களைப் போல இதனையும் கருதி முன்னும் பின்னும் பாராது தள்ளினார். அது பற்றியே இச்சூத்திரம் செய்தனம் என்க.

[வி-ரை: எதுகைமோனை நிமித்தமாக ஐ ஒள என்னும் தனி எழுத்துக்களோடு அய் - அவ் என்னும் இணை எழுத்துக்களையும் தழுவுதல் வேண்டும் என்பது இச்சூத்திரத்தால் பெறப்படுகின்றது. போலிஎழுத்தை நச்சினார்க்கினியர் கொள்ளாது தள்ளியது ஏற்புடைத்தன்று என்பது. போலி எழுத்துப் பற்றித் தொல்காப்பியர்,