பக்கம் எண் :

258இலக்கணக் கொத்து 

‘அகர இகரம் ஐகாரம் ஆகும்’                                  - தொ. எ. 54

‘அகர உகரம் ஒளகாரம் ஆகும்’                                     ’’   55

‘அகரத் திம்பர் யகரப் புள்ளியும்

‘ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்’                           ’’   56

‘இகர யகரம் இறுதி விரவும்’                                       ’’  57          

எனவும், நன்னூலார்,

‘அம்முன் இகரம் யகரம் என்றிவை

எய்தின் ஐயொத்து இசைக்கும் அவ்வொடு

உவ்வும் வவ்வும் ஒளஓ ரன்ன’                                     - ந. 125

என்றும் குறிப்பிட்டனர். இந்நூற்பாக்கள் உள்ளவாறு பொருள் செய்யப்படவில்லை என்பதனை உட்கொண்டு, பிரயோகவிவேக நூலார் இவை போலி எழுத்துப் பற்றியன என்பதனை விரிவாக விளக்கியுள்ளார். அவர் கருத்தை உட்கொண்டு இந்நூலாரும் இந்நூற்பா வரைந்து இங்ஙனம் உரை எழுதியுள்ளார்.

‘‘தொல்காப்பியர் இயற்கை ஆயிரம் என ஓர் எண்ணுக் கொண்டதன்றித் தொள்ளாயிரம் என்பதன்கண் சந்தி நோக்கி நூறு திரிந்த ஆயிரமும் கொண்டாற் போலவும், தாமரை என்பது செம்மொழியும் பிரிமொழியும் ஆயினாற்போலவும், இயற்கையாய ஓரெழுத்து ஐகார ஒளகாரங்கள் கொண்டதன்றி எதுகை நோக்கி ஈரெழுத்து இயைந்த ஐகார ஒளகாரங்களும் கொண்டார் என்க. உயிர்மெய்களை ஒற்றுமை நயம் கருதிஓரெழுத்தாகவும் வேற்றுமை நயம் கருதி ஈரெழுத்தாகவும் கொண்டாற் போல, ஐகார ஒளகாரங்களையும் அவ்வாறு கொண்டார் என்பதும் ஒன்று. போலி எழுத்து என்பார் இலக்கணப் போலி ஒப்பில் போலி போல எழுத்துப் போலியும் கைக்கொண்டு எதுகை கொள்வார் என்க. மியா, நுந்தை என்பன ஒரு செய்யுட்கும் பயன்படாது இக்காலத்து நின்றாற் போல அஇ, அஉ என்பன. இக்காலத்துப் பயன்படாமலே நின்றன என்றும் அமையும்’’ - பி.வி.5உரை.] 5