பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 6259

தொகாநிலையின் இன்றியமையாமை

92அறுவகைத் தொகையும் அப்பொருள்படுமே
ஆதலின் உருபு முதலிய அடைந்து
நின்றுபயன் என்எனின் நிகழ்த்தக் கேள்நீ
தொக்குழி அப்பொருள் தோன்றியும் வேறோர்
பொருளே தோன்றியும் பலபொருள் தோன்றியும்
வரும், பின் இரண்டும் மயக்கம் கொடுக்கும்;
அத்தொகை இருவகை வழக்கினும் ஆகா;
கருதிய பொருள்அறி கருவி யாக
வருமே உருபு முதலிய விரியே.
 

எ-டு; மரத்தை வெட்டினான் - மரம் வெட்டினான் எனத் தொகின் அப்பொருள்பட்டது. சாத்தனை வெட்டினான், சாத்தனொடு வந்தான், சாத்தற்குக் கொடுத்தான் - சாத்தன் வெட்டினான், சாத்தன் வந்தான், சாத்தன் கொடுத்தான் எனத் தொகின் வேறு பொருள்பட்டன, கரும்புக்கு வேலி - கருப்பு வேலி எனத் தொகின் பல பொருள்பட்டது.

இம்மூன்றனுள் முன்னது இரு வழக்கினும் பொருந்தும், பின்னிரண்டும் ஒரு வழக்கினும் பொருந்தா. அஃது எங்ஙனம் எனின், முறையே கூறுகின்றாம், கருதின பொருளை விட்டுக் கேட்கின்றான் வேறு பொருளைக் கருதலானும். அதுவோ இதுவோ எதுவோ என மயங்குதலானும் என்க. ஆகையால் கருதின பொருள் அறி கருவியாகிய உருபு முதலிய விரி வந்து நிற்றலால் பயன் உண்டு என்க.

ஏனைய ஐந்தொகையும் இவ்வாறு வரும்.

விரிநிலம், குளிர்நீர், சுடுதீ, பெய்மழை - பொருந்தும்.

பார்த்தநீர் - பார் நீர் (பாரும் நீரும், நீரைப் பார்)

ஆகும் வாகனம் - ஆகுவாகனம் ( பெருச்சாளி வாகனம்)

காத்தமலர் - காமலர் (சோலையிலுள்ள பூ)

பூத்த அரசு - பூவரசு(ஒருமரம்)

எனத்தொகின் பொருந்தாது. இவை வினைத்தொகை,