[வி-ரை: புணர்ச்சியாவது - பொருத்தப் புணர்ச்சி, பொருத்தமில் புணர்ச்சி, பொருத்தமும், பொருத்தமின்மையும் ஒருங்குஇயலும் புணர்ச்சி, வழுவுடைப் புணர்ச்சி என நான்காகும். இவை பின்வரும் நூற்பாக்களில் விரித்துரைக்கப்படும்.] 20 பொருத்தப் புணர்ச்சி 107 | பொருத்தப் புணர்ச்சியை விரிக்கின் பெருகும்; அன்றியும் யாவரும் அறைந்தனர் என்க.
|
[வி-ரை: பொருத்தப் புணர்ச்சியை உயிர் 12, மெய் 11, குற்றிய லுகரம் 1 ஆக 24 ஈறுகளையும் நிலைமொழியாகக் கொண்டு, உயிர் 12 உயிர்மெய்91 இவற்றை வருமொழி முதலாகக் கொண்டு, அல்வழிப் புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சி என்று விரித்துக் கூறல் வேண்டும் ஆதலின் பெருகும் என்றார். அன்றியும் பொருத்தப்புணர்ச்சி தொல்காப்பியம், வீரசோழியம், நன்னூல், நேமிநாதம், இலக்கணவிளக்கம் ஆகிய நூல்களில் விரித்துக் கூறப்பட்டமையின் தெளியப்படும் என்றார்.] 21 பொருத்தமில் புணர்ச்சி 108 | ஆற்றொழுக்கு அடிமறி மாற்றுஇரண்டு அல்லா எழுவகைப் பொருள்கோள்1, மரூஉமொழி2 பொய்யுரை3 சிலஇடைப் பிறவரல்4,பண்பு5,அதிகாரம் ஆதியாம் பதங்கள்6 அவையும் அன்றி விகுதியுருபு உம்மை முதலினுள் சிலவும்7 பொருத்தம்இல் புணர்ச்சி எனப்புகன் றனரே.
|
1. ஆற்றொழுக்கம் அடிமறிமாற்றும் பொருத்தப் புணர்ச்சியுள் அடங்கும். ஏனையவற்றுள் உதாரணம், 'சுரையாழ அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப ' முதலிய எழுவகைப் பொருள்கோளும் பலரும் விரித்தனர் காண்க. |