பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 22287

[வி-ரை: தொல்காப்பியனார் - நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று எனப் பொருள்கோள் நான்கே என்றார். நன்னூலார் ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு’ தாப்பிசை, அளைமறிபாம்பு, கொண்டுகூட்டு, அடிமறி மாற்று என்ற எட்டு என்றார். நேமிநாத உரையும், ‘யாப்பருங்கலக் காரிகை விருத்தி உரைகளுள் மொழிமாற்றினை அடிமொழிமாற்று, சுண்ண மொழி மாற்று என இரண்டாகப் பகுத்துப் பொருள்கோள் ஒன்பது என்னும். இவரும் பொருள்கோள் ஒன்பது என்பதை உடன்பட்டுப் பேசுகிறார்.]

2. நுனிக்கொம்பர், கடைக்கண், அரைக்காசு, முன்றில் என முன்பின்னாக நிற்றல் முதலியன மரூஉமொழி.

3. ‘ஒப்பில்லா மலடி பெற்ற ஒருமகன் முயற்கொம்பு ஏறித் தப்பில்ஆ காயப் பூவைப் பறித்தமை சாற்றினாரே’- சி. சி. பா. 17

முதலியன எல்லாம் பொய்யுரை.

4. வல்லம் எறிந்த மல்லல் யானைப் பெருவழுதி என்றலே முறை. இதன் இடையில் நல்லிளங்கோசர் தந்தை என வரல் இடைப்பிறவரல் என்க. இச்செய்யுள் போலப் பெரும்பாலும் உள என்க.

5. ‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று’                                     - கு. 100

என்புழி இனிய கனி, இன்னாத காய் எனப் பின்னும் பிரித்துப் பொருத்தலே பண்பு.

6. ‘அதிகாரம் ஆதி’ என்றது,
‘அதிகாரத்தால் அவாய்நிலைதன்னால்’                                   -89

என்னும் சூத்திரத்திற்கூறிய உதாரணம் முழுதும் கொள்ளுதற்கு என்க.

இதுவரை பதத்தோடு பதம் புணர்ந்த பொருத்தமில் புணர்ச்சி.