செய்யா என்னும் வினையெச்சம் விதிவினை. நடத்தலைச் செய்யாவாகிய குதிரைகள் கெட்டன - இஃது அஃறிணைப் பன்மைப்பெயர். செய்யும் யாவும் ஆவும் - இவை பலமொழி. செய்யாச்சாத்தன் - மறை; செய்யாவந்தான் - விதிவினை. குதிரைகள் நடத்தலைச்செய்யா - இயற்சொல்; செய்யாச் சாத்தான் - திரிசொல். - 67 உரை முதல்நிலை இல்லாத் தொழிற்பெயர்: 70 எ-டு: பூசல், வேட்டை, சண்டை, கூத்து, தொழில், வினை, ஆசை, வேட்கை, அவா, சூது, வாது, தச்சு, கொல்லு, நெட்டி என வரும்; பட்டினியும் அது. - 70 உரை இது விதி, இது மறை எனப்படாதன: 75 போ, வா; தொடு, விடு;வாழ், கெடு; உலவு, நில்; உறங்கு, விழி; விரும்பு, வெறு; கொடு, வாங்கு; சா, பிழை; கிழக்கு, மேற்கு; தெற்கு, வடக்கு; உறவு, பகை; துன்பம், இன்பம்: ஆண், பெண்; பகல், இரவு; ஒளி, இருள்; மெய், பொய்; உண்மை, இன்மை, - 75 உரை மறைச்சொல்லின் முதனிலை விதிப்பொருள் தருதல்: 77 ஒரு பொருளின் புடைபெயர்ச்சியே வினை என்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது; அவ்வினையைக் கொள்வதால் வினை யெச்சம் என்பதும் அங்ஙனம் முடிந்தது; அவ்வினையெச்சம் வினையைக் கொள்ளுதலன்றி வினையின்மையைக் கொள்ளாது என்பதும் அங்ஙனம் முடிந்தது. ஆகவே, உண்டு வந்தான் என்பது பொருந்தும். உண்டு நடவான் என்பது பொருந்தாது; இலக்கண வழுவேயாம்; ஆகையால், அம் மறைச்சொல்லினுள் முதல் நிலையைப் பிரித்து ஒரு பொருளின் புடைப்பெயர்ச்சியாகிய புடை பெயர்ந்தநடத்தல் என்னும் தொழிற்பெயராக்கி, வினையெச்சத்தை |