வினைகொண்டு முடித்து, பின்பு செய்யான் என்னும் மறையை வருவித்து உண்டு நடத்தலைச் செய்யான் என்று முடிப்பர். இக்கருத்துப் பரிமேலழகருக்கும் உரையாசிரியக்கும் நியமம். இது மறைச்சொல்லின் முதல்நிலை விதிப்பொருள் பெற்றது. - 72 உரை தனக்குப் பயன்தரும் பேரறிவோர் வினை: 80 யான் எனது என்னும் செருக்கு அறுத்தான்: அவாவை விட்டான்; பிறவியை ஒழித்தான்; வீட்டை அடைந்தான். - 80 உரை பிறருக்குப் பயன்படும் பேரறிவோர் வினை: 80 நூலைப் பாடினான்; உரையை எழுதினான்; மாணாக்கனை அறிவித்தான். - 80 உரை தனக்கும் பிறருக்கும் பயன்தரும் பேரறிவோர் வினை: 80 வேதாகமவழி விரும்பி ஒழுகினான் ; இரக்கத்தொடு பலி இரக்கக் கொடுத்தான் ; அரனது விழாவை மிக அலங்கரித்தான் ; சிவனது பூசையை மிகச் சிறப்பித்தான். - 80 உரை தனக்கும் பிறருக்கும் பயன்சாராப் பேரறிவோர் வினை: 89 அறம் பொருள் இன்பம் அளவின்றித் தேடினான். அட்டமாசித்தியை அருமையாய்த் தேடினான். - 80 உரை வெறுவினை - நல்வினை தீவினை எனும் இரண்டின் உட்படாது வருவது: எ-டு: கையை நொடித்தான்; காலை நெட்டிவிட்டான்; மூச்சுவிட்டான்; உறுப்பழுக்கை உருட்டி உதிர்த்தான்; வேர்வையைத் துடைத்தான்; சோற்றைப் பிசைந்தான் என்பன. |