பக்கம் எண் :

 உரை நலன்கள்51

தீவினை நல்வினையாதல் : 81

எ-டு: எண்ணாயிரவரைக்கழுவிலேற்றினார்; ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார்; கடவுளை நாள்தொறும் கல்லால் அடித்தனர்; ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர் முதலியன.- 81 உரை

நல்வினை தீவினையாதல் : 81

அநங்கன் அலரை அரனிடத்து இட்டான்; வேங்கை வரிப்புலிக்கு விடத்தைத் தீர்த்தான்; பாம்புக்குப்பால் வார்த்தான்; வலையனுக்குத் தூண்டில் வழங்கினான்; கள்ளனுக்குச் சோறு இட்டான்; கணவனை இழந்தோர்கட்கும் கண்ணி சூத்தித் திரியுமவர் துயரினுக்கும் இரங்கினான் - போல்வன. - 81 உரை

செய்யாவினை செய்வினையாதல் : 81

பெரியோரைக் காணில் இருக்கை எழாமை, எதிர் செல்லாமை; ஒருவனை யாறு ஈர்த்தவழியும், விடம் தீண்டின வழியும் அவ்விடர் தீர்க்கும் வல்லன் தீராமை;

தலைவியைப் புல்லுதற்கு விதித்த நாளில் புல்லாமை - முதலியன.- 81 உரை

செய்இருவினையே செய்யா வினையாதல் : 81

மெய்யுணர்வுடையோர் எவ்வினை செய்யினும் அவ்வினை செய்யாவினையாகும் என்று ஆகமமறை எல்லாம் இயம்பும்.- 81 உரை

உண்டு என்பதன் இலக்கணம் : 85

உண்டு என்பது முறை இறந்து தன்மை முற்றாயும், எச்சமாயும், உள் என்னும் முதல்நிலையாயும், பகுபதமாயும், உண்மை என்னும் தொழிற்பெயராயும், பகாப்பதமாயும், உண் என்னும் முதல்நிலையாயும் திரியும். - 85 உரை

வேண்டும்-தகும்-படும் என்னும் பொதுவினை: 85

வேண்டும் முதல் மூன்றும் முற்றிற்கும் எச்சத்திற்கும் பொதுவாய செய்யும் என்னும் வாய்பாடு அன்றோ எனின்,