‘கால காலனைக் கரிசறக் காண்கின் காலனைத் துரத்தும்அக் காட்சி தானே.’ ‘கால காலனைக் காண்கின் றார்தமக்கு ஓர்வீடு அளிக்கும் காட்சிஈது உண்மை.’ - - 66 உரை திருச்சிராப்பள்ளிக்கும் திருநெல்வேலிக்கும் மதுரை நடு - 66 உரை யான் எனது என்னும் செருக்கு அறுத்தான். அவாவை விட்டான். பிறவியை ஒழித்தான். வீட்டை அடைந்தான். வேதாகமவழி விரும்பி ஒழுகினான். அரசனது விழாவை மிக அலங்கரித்தான். சிவனது பூசையை மிகச் சிறப்பித்தான். - 80 உரை எண்ணாயிரவரைக் கழுவிலேற்றினார். (சம்பந்தர்) ஆண்டவனைத் தூதாக அஞ்சாது நடத்தினார். (சுந்தரர்) அப்பர் தம் கொண்ட விரதம் (சமணவிரதம்) அழித்தனர் கடவுளை நாடோறும் கல்லால் எறிந்தனர். (சாக்கியர்) ஆண்டவன் தலையில் அடியால் மிதித்தனர். (திண்ணனார்) - இவை தீவினை நல்வினையாயின. அநங்கன் அலரை அரனிடத்திட்டான் - நல்வினை தீவினை ஆயிற்று. - 81 உரை |