பக்கம் எண் :

44இலக்கணக் கொத்து 

இவ்வுவமை முதலியன காட்டி ‘சொற்றொடர்பு உண்டு என்றல் மாத்திரமேயன்றிப் பொருள்தொடர்பு சிறிதாயினும் கூடாது’ என்று உவமேயம் கூறி மறுப்பர்.                          - 105 உரை

இரட்டைக் கிளவியைப் பிரித்தது என்னெனின், இரட்டைக் கிளவி. இலையிரட்டை - பூவிரட்டை - காயிரட்டை - விரலிரட்டை போல ஒற்றுமைப்பட்டு நிற்றலானும், அடுக்குக்கள் ஐந்தும் மக்கள் இரட்டை - விலங்கு இரட்டை - முட்டையிரட்டை - கையிரட்டை காலிரட்டை போல வேற்றுமைப்பட்டு நிற்றலானும் என்க.

பொருள் அன்று என்பது அறிந்தும் இதுவே பொருள் எனல் - பிறன் ஒருவனை மாதா பிதாவாகத் துணிந்து திதி கொடுத்தலும், மண் - மரம் - சிலை - செம்பு முதலானவற்றைத் தெய்வம் என்று துணிந்து பூசை செய்தலும், வீட்டை அறிவிக்கும் மகனைக் கடவுள் என்று துணிந்து அவன் கருத்தின்வழியே நிற்றலும் போல்வன.                                                       - 122 உரை

ஒற்றுமை - ‘உடலும் உயிரும்போல’; வேற்றுமை - ‘கண்ணும் அருக்கனும்போல’ பொதுமை - ‘அறிவின் அறிவுபோல’.                                                    - 129 உரை

இவ்விலக்கணக் கொத்து நூற்கு இவ்வாசிரியர் தாமே உரை வரையாதுபோயிருப்பின், பல செய்திகளை இவர் கருதியவாற்றான் விளக்குதற்கு வாய்ப்பு ஏற்பட்டிராது. நூற்பாக் கருத்துக்களை எடுத்துக்காட்டு வாயிலாக விளக்குதலும், சில சொற்களுக்கு இலக்கணம் விரித்தலும், சில வேறுபாடுகளை விளக்குதலும் இவ்வுரையில் சிறப்பாக அமைந்துள்ளன. அவற்றை நிரலே காண்போம்:

ஒரு சூத்திரத்துக்குப் பலரும் பல மதமாய் உரைத்தல்:               6

‘வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது’ என்புழி, மூன்றனைப் பதி பசு பாசம் என்றும், தத்துவ மசி வாக்கியம் என்றும், அறம் பொருள் இன்பம் என்றும், எழுத்துச் சொற் பொருள் என்றும், ஆண்டு என்றும் உரைப்பர், இவை ஒரு சூத்திரத்திற்கே பலரும் பல மதமாய் உரைத்தல்.            - 6 உரை