‘சுட்டு வகரம் மூவினம் உற’ நன். 235 ‘வ-இறு சுட்டிற்கு அற்றுறல் வழியே, நன். 250 ‘சுட்டின்முன் ஆய்தம் அன்வரின் கெடுமே’ நன். 251 ‘அதுமுன் வரும் அன்று’ நன். 180 என்று கூடிநிற்பினும் சுட்டு என்று கூறினர். இவ்விலக்கணங்களை நோக்கிலர். அதுநிற்க, ‘தனிவரின் சுட்டு’ (நன். 66) என்னும் சூத்திரம் ‘இன்னென வரூஉம்’ (தொ. எ. 131) என்னும் சூத்திரம்போல விகாரப்பட்டு நின்றது என்று யாப்புவிதி இயைபு நோக்கிலர், அதுநிற்க, ஒருமொழி ஒழிதன் இனங்கொளற்கு உரித்தே’ (நன். 358) என்னும் சூத்திரப் பொருளையும் நோக்கிலர். அது நிற்க, ‘ஒன்றினம் முடித்தல் தன்னினம் முடித்தல்’ முதலிய உத்தியையும் நோக்கிலர். அது நிற்க, வரின் என்னும் எச்சம் பெரும்பான்மையும் கூடிநின்று சுட்டுப்பெயராம் என்று பொருள் தருதலையும் நோக்கிலர். அது நிற்க, ‘முதல்வரின் சுட்டே; தனிவரின் சுட்டே’ எனப் பொருள்கோள் இலக்கணமும் நோக்கிலர். அதுபற்றித் தமக்கென ஒன்றிலரும் அதுவே. உரைப்பார் உரைப்பவைக்கெல்லாம் யாம் என் செய்வோம் என்க. - 8 உரை ‘முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும்’ என்பதை மாத்திரம் உட்கொண்டு சூத்திரப்பொருளை வரம்பு செய்யாது ஓடுவர், அங்ஙனம் ஓடியும் இளைப்பே பயனன்றி நூற்பயன் இல்லையே. ஒவ்வொரு சூத்திரத்தை முக்கால் பார்த்துப் பொருளை வரம்பு செய்து நடப்பாராயின், அவர்கட்கு ஒருகாலே அமையும்; இருகால் முக்கால் வேண்டுவதில்லை என்பது. - 8 உரை அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக: 8 பொருள் என்னும் பெயர் பொதுப்பெயர் ஆயினும், கல்விப் பொருளை மாத்திரம் அங்ஙனம் கூறாது, நற்பொருள் - பெரும் பொருள் - அரும்பொருள் - குறையாப்பொருள் - துணைப்பொருள் - நீங்காப்பொருள் - கேடில்பொருள் - விளக்கும்பொருள் - விழுமிய பொருள் முதலாக யாதானும் ஓர் அடைகொடுத்தே கூறுவர்;
|