பக்கம் எண் :

 உரை நலன்கள்47

‘கேடில் விழுச்செல்வம் கல்வி’

எனச் சிறுபான்மை பல அடைகொடுத்தும் கூறுவர்.                               - 8 உரை

ஆதன் தந்தை என்பது செய்யுளில் வருங்கால் அவ்வாறு வாராது, ஆந்தை என்றே வரும். இச்சொல்லை வேற்றுமைத் தொகைக்கு உதாரணம் காட்டினமாயின், சிற்றதிகாரங்களைக் குற்றமற முற்றக்கற்ற கூரியரும் அவ்வாறு கொள்ளாது, நிலை மொழி ஏதோ, வருமொழி ஏதோ, அம்முதல் ஏதோ, எவ்வுருபு தொக்கதோ எங்ஙனம் தொக்கதோ, ஈது ஒரு பறவைப் பெயரோ, பிழைபட்டதோ’ எனப் பலவும் எண்ணி அலைவரே.                                                        - 12 உரை

வேற்றுமைஉருபுகள் அல்லாதனவும் வேற்றுமைஉருபுகள் போலக் காணப்படுவதற்கு எடுத்துக்காட்டுக்கள்; பெண்ணை வளர்த்தான், வேலைவென்றான், எண்ணோடு நின்று பிரிந்தது, தலையோடு தகர்ந்தது. சாரியையின் நீங்கிற்று, உணற்குவந்தான், சித்திரைக்குப் போயினான் இவன்கால் நெடிது, அவன்கடை வெல்லம் முதலியன.                                      - 19 உரை

தெரியாநிலை - மாடம் செய்யப்பட்டது. தெரியாநிலையாவது வினைமுதல் என்று தெரியப்படாமல் வினைமுதலாயே நிற்பது.

தடுமாற்றம் - ‘ஒத்தகிழவனும் கிழத்தியும் காண்ப’. தடுமாற்ற மாவது ஒருபொருளே ஒருகால் வினைமுதலாயும் ஒருகால் செயப்படுபொருளாயும் நிற்றல்.                         - 26 உரை

தெரிநிலைச் செயப்படுபொருள் - மாடம் செய்யப்பட்டது. தெரிநிலையாவது வினைமுதல் உருபு ஏற்றும் செயப்படுபொருளே என்று தெரியநிற்றல்.                                - 31 உரை

நிலைமையில் உடைமைகள் ஆம் வேற்றமைக்குறை:சாத்தனது பசுமுதலியன முன்ஒருவர்க்கு உரிமையாயும், பின்வேறொருவருக்கு உரிமையாயும் வருதலின் நிலைமையில் உடைமைகள் என்றாம்.
                                                                         - 40 உரை