பக்கம் எண் :

48இலக்கணக் கொத்து 

முதல்நிலைகள் முன்னிலை ஏவல் ஒருமை எதிர்கால முற்று என்பையாயின், அது பொருந்தாது; என்னை? இவை ஆறும் மாறுபடுதலின். அஃது எங்ஙனமெனின் முதல்நிலை தனியே நின்று முன்னிலைக்கண் சென்றதாயின், அவ்வாறு ஏனை ஈரிடத்தும் சேறல் வேண்டும்; செல்லாதாகலின் முன்னிலையன்று. ஏவலாயின், முதல்நிலைக்கண் வி-பி இணைந்து வேறுபொருள் பட்டாற்போல, ஐ-ஆய்-இ விகுதி கூடின் வேறு பொருள்பட வேண்டும்; அஃது இன்று. முதல்நிலை தானே ஏவலாயிருக்கவே, அதன் மேல் மூன்று விகுதியும் விதித்தல் நின்று பயன் இன்மையாம் ஆகலின், ஏவல் அன்று. நடந்தார் என்புழி நட என்னும் வினை பன்மைப்பாற்பொருள் படலின், ஒருமையன்று நடந்தான் என்புழிநட என்னும் வினை இறந்த காலவினையாகலின் எதிர்காலம் அன்று. நடத்தல் என்புழி நட என்னும் சொல் பெயராயே நிற்றலின் வினையன்று. ‘செய்குன்று’ - ‘செய்தக்க அல்ல’ - ‘அறிகொன்று’ இச்சொல் நன்று - வழிவற்றது - இவ்வயலுக்கு ஆயிரம் முடிநட்டான் என்புழி, ஈரெச்சம் - தொழிற் பெயர் - பொருட்பெயர் முதலாயினவற்றிற்குப் பொதுவாதலின், முற்றன்று. அன்றியும் நடந்தேன் நடந்தான் முதலிய வழுவற்ற சொற்களெல்லாம் இடவழுவாயேவிடும், விதியும் மறையும் ஒரு சொற்கண்ணே உள்ளதே வினை, அக்குணம் இவற்றிற்கு இன்று. முதல்நிலை புடைபெயர்தலே வினையாதலின் எல்லாவினைச் சொற்களும் பிறத்தற்கு மூலமாகிய பொது முதல்நிலைத்தனி வினைப்பெயரே என்று கொள்க. எல்லாவினைச் சொற்களாவன, திணை பால் இடம் காலம் விதி மறை பொது சிறப்பு ஆதியோடு கூடின முற்று எச்சங்களும் தொழிற்பெயர்களும் என்க.                                        - 66 உரை

முற்று ஈரெச்சம்......................ஒப்பாய் நிற்றல்:                         67

முற்றுமுதல் நிற்றல்வரை ஒரு பொருள், அது செய்யா என்னும் வாய்பாடு.

ஒன்றனையும் செய்யா ஓரறிவும் அற்ற உயிர்கள். - முற்று. செய்யாத சாத்தன், செய்யாது வந்தான் என்ற இவை விகாரப்பட்டுச் செய்யாச்சாத்தன், செய்யாவந்தான் என ஈரெச்சமாயின். மாறாக்காதலர்,............................., ஏறாவளை, தோற்றா இடனாய் என வருவனவும் அவை.