பக்கம் எண் :

 உரை நலன்கள்53

கெடுதல் விகாரத்திற்கும் மொழிவருவித்தலுக்கும் வேறுபாடு : 89

கெடுதல்விகாரம் மொழிவருவித்தலுக்கு முன்பே சொல்லாவது பொருளாவது சொற்பொருள் கூடியாவது முடியாது கிடக்கும். மொழி வருவித்தலாவது மொழி வருவித்தற்கு முன்பே சொல்லும் பொருளும் முடிந்துகிடக்கும். - 89 உரை

‘செய்யுள் விகாரத்தால், சிதைந்ததனால்’ 89

செய்யுள் விகாரம்-அகரஇறுதி இயற்றே, வாய்பாட்டின் எடுத்துக்காட்டு, இல்வாழ்க்கை, சீர்தூக்கி என்பன முறையே அகர இயற்று, பாட்டின், காட்டு, வாழ்க்கை, தூக்கி என வருவன. சிதைந்தது-இழிவுபட்டது; கழா அக்கால் முதலியன. -89 உரை

‘பண்புத்தொகை விதி பகரின் பெருகும்’ என்பதன் விளக்கம்: 98

வெண்கரும்பு என இனம் பற்றியும்,

வெண் திங்கள் என இனம் பற்றாமலும்,

வெண்டாமரை எனத் தனக்கு உரிய சினையை விட்டு உரிமையில்லாத முதலைப் பற்றியும், (வெண்பூத்தாமரை).

வெள்ளாடு என எதிர்வுபற்றியும், (எதிர்காலத்து கேள்விக்குப் பயன்படுதல் கருதி).

விலங்கன்னார் வெள்ளறிவினார் என இழிவு பற்றியும்,

வெண்களமர், வெள்ளாளர் எனச் சாதி பற்றியும்,

வெள்ளோட்டம் எனப் புதுமை பற்றியும்,

வெண்தேர் எனப் பொய் பற்றியும்

வெளிற்றுப்பனை என உள்ளீடின்மை பற்றியும்,