பக்கம் எண் :

54இலக்கணக் கொத்து 

வெளியார் முன் என இயல்பு பற்றியும்,

இச்சோறு வெண்படி எனக் கலப்பின்மை பற்றியும்,

இவ்வுரு வெண்கலம் என ஒரு பெயரே பற்றியும்,

வெள்ளிடை எனத் தனிமை பற்றியும்,

இவ்வணி வெள்ளைப்பொன் என நிறமின்மை பற்றியும்,

இவனுக்கு வெள்ளைப் புத்தி என மந்தம் பற்றியும்,

இவ்வூரில் வெள்ளைப்பிள்ளையார் எனப் பண்புப்போலி பற்றியும்

இன்னும் பலவாய் ஒரு பண்பே விரிதலின், ‘பெருகும்’ என்றாம். - 98 உரை

எழுத்தாற்றல் கெடுதல்: 102

இக்குளத்தைப் பெருக்கு; இவ்வாற்றுப் பெருக்கு நேற்று வந்தது; இவ்வாற்றுப் பெருக்குக் கடல்போன்றது என முறையே குகர உயிர்மெய்யானது ஒன்று-அரை-கால் மாத்திரையாகவும், முற்றுகரம் - குற்றுகரம் - ஒற்று ஆகியும் அலகுபெற்றே நின்றும், பெறுதற்கும் பெறாமைக்கும் பொதுவாயே நின்றும், பெறாதே நின்றும் எழுத்து ஆற்றல் கெட்டது. - 102 உரை

சொல் ஆற்றல் கெடுதல் : 102

நகம் என்னும் சொல் ஒருகால் உகிரையும், ஒருகால் மலையையும் உணர்த்தல் சொல் ஆற்றல் கெட்டதாகும். - 102 உரை

பொருள் ஆற்றல் கெடுதல் : 102

‘இப்பணம் முழுதும் கொடாதே’ என்னும் தொடரினுள், ஒருகால் சிறியதாயினும் கொடாதே என்றும், ஒருகால் சிறிது வைத்துப் பெரிது கொடு என்றும், ஒருகால் பெரிதுவைத்துச் சிறிது கொடு என்றும் உணர்த்தல் பொருளாற்றல் கெட்டது - 102 உரை