பக்கம் எண் :

 உரை நலன்கள்55

புணர்ச்சி விகாரம், புணர்ச்சியில் விகாரம் - வேறுபாடு: 113

புணர்ச்சி விகாரம் வருமொழி நாற்கணம் நோக்கியாவது, வேற்றுமை அல்வழி நோக்கியாவது, அடிதொடை ஓசை மூன்றும் நோக்கியாவது, இன்னும் யாதானும் ஒரு காரணத்தால் விகாரப்படுவது. புணர்ச்சியில் விகாரம் ஒரு காரணமும் இன்றியே விகாரப்படுவதாம். - 113 உரை

நிலைமாறுதல்:

‘தமிழ் மொழி விதியால் நிலைமாறுதலுக்கும் வடமொழி விதியால் நிலைமாறுதலுக்கும் வேறுபாடு என்னை யெனின், ‘நிலை மொழியும் வருமொழியும் திரியாது தம்முள் நிலைமாறுதல் திரிந்து தம்முள் நிலைமாறுதல் என்க. எ-டு: ‘வைக்கும் தன் நாளை எடுத்து’ - ‘பருகுவன் பைதல் நோய் எல்லாம் கெட’ - எனவும், வாய் பிளந்து உறங்கினான், குறட்டை விட்டு உறங்கினான் எனவும் முறையே காண்க. - 114 உரை

அரசன் என்பதன் பொருள்கள்: 117

அரசன் என்பது அரச குலத்தில் பிறந்தவன், அரசனுக்குப் பிறந்த வேறொரு சாதியான், அரசனது தொழிலை ஏற்ற வேறொரு சாதியான், அரச குலத்தில் பிறந்து வேறொரு சாதியாய் வழுவினவன் என்று பலபொருள் ஒருசொல்லாகப் பொருள்பட்டு வரும். -117 உரை

மாண்டான் என்பதன் பொருள்கள்: 117

மாண்டன் என்பது பஞ்சத்தில் படையில் மாண்டன், குணத்தில் பொறையில் கல்வியில் ஒழுக்கத்தில் மாண்டான் என்று பலபொருள் ஒரு சொல்லாகப் பொருள்பட்டு வரும். - 117 உரை

வேற்றுமை அல்வழி இரண்டற்கும் பொதுவழிச்சந்தி 118

எ-டு: அஞ்செவி, அங்கை, கருப்புவேலி, உரைநூல், நூலுரை, மதிமுகம், முகமதி, புலிகொன்றது, நாய்கடித்தது போல்வன. - 118 உரை