பெறுதலே எனவும், ஆனவன் முதல் ஐம்பாற்சொல்லும் பெயர்ப் பின் அடைதலே எனவும் பலர் எழுவாய் வேற்றுமைக்கு உருபு வெவ்வேறு உரைத்தார் எனக்கூட்டியும் பொருள் செய்க] 1-5. | எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று, பெயரே, பயனிலை கொள்ளும் தன்மையே, பயனிலை தன்னைக்கொண்ட தன்மையே, வினைமுதல் ஆதலே
|
இவற்றுள், முன்நின்ற ஐந்தும் பலர் நூல்களாலும் பலர் உரைகளாலும் தெளியக் கிடந்தன. ஏனை மூன்றும் விளக்குகின்றாம். [வி-ரை: முன்நின்ற ஐந்தும் என்பன உருபே இன்று என்பது முதல் வினைமுதலாதல் ஈறாகக் கிடந்தன. எழுவாய் வேற்றுமைக்கு உருபே இன்று என்பது தமிழ் நூலார் பலருக்கும் ஒப்ப முடிந்த கருத்தாம். எழுவாய் வேற்றமை பெயரே என்பதனை - தொல்காப்பியனார், ‘எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே’ தொ-சொ. 65 என்பதனாலும், நன்னூலார், ‘எழுவாய் உருபு திரிபுஇல் பெயரே’ - ந 295 என்பதனாலும், நேமிநாதநூலார், ‘பெயர் எழுவாய் வேற்றுமையாம், - நே. சொ. 17 என்பதனாலும், பிரயோகவிவேகநூலார், ‘தேற்றுந் தமிழுக்கு எழுவாய் வேற்றமை திரிபில் பெயர்’ என்பதனாலும் குறிப்பிட்டுள்ளனர். இலக்கண விளக்கமும் நன்னூல் நுதலியதனையே நுதலிற்று. |