பக்கம் எண் :

260இலக்கணக் கொத்து 

ஆருயிர், ஆரணங்கு, ஆரமிர்தம் - பொருந்தும். ஆரிருள், ஆரடிசில், ஆர்நீர், ஆர்வயிறு, ஆர்வாய் - பொருந்தாது. (இப் பண்புத்தொகைகள் தொக்கவழி வினைத்தொகையாகவும் பொருள் தருதலானும், ‘ஆர்’ யார் என்பதன் மரூஉவாய்ப் பொருள் கவர்த்தலானும் என்க.)

மதிமுகம், பவளவாய் - பொருந்தும். கடல் போல முழங்கிற்று, மழை போலப் பொழிந்தது. புலி போல பாய்ந்தது - இவை கடல் முழங்கிற்று, மழை பொழிந்தது, புலி பாய்ந்தது எனத் தொகின் பொருந்தாது. (எழுவாய்த் தொடராகும்) - இவை உவமைத் தொகை.

கபிலபரணர், உவாஅப்பதினான்கு - பொருந்தும். எட்டும் நூறும், பொன்னும் மணியும், வருவதற்கு உரியன். சாத்தனும் வந்தான் - இவை எட்டு நூறு, பொன்மணி, வருதற்கு உரியன், சாத்தான் வந்தான் எனத் தொகின் (உம்மைத்தொகைப்பொருள் தாராமையின்) பொருந்தாது.

பொற்றொலி (அன்மொழித் தொகை) பொருந்தும்.

பொற்குடம் (அன்மொழித் தொகை) பொருந்தாது.

(பொற்றாலி மகளைக்குறிக்கும்; பொற்குடம் வேற்றுமைத் தொகையாயே நிற்கும்.)

எழுத்துச் சொற்பொருள் அணிக்குற்றங்கன் வரினும் சந்தக் குற்றம் வரலாகாது என்னும் யாப்புவிதி நோக்கி, ‘எவ்வழுவரினும் அமைக; அடிதொடை ஓசை முதலிய செய்யுள் உறுப்புக்கள் வழுவற்க’ என்னும் கருத்தான். பொருந்தாதவற்றையும் செய்யுற்விகாரம் என்று பெயரிட்டு இடர்ப்பட்டு ஒரோவழித் தொகுப்பர் சான்றோர். அங்ஙனம் தொகுப்பராயுனும் விரிந்து நின்று பொருள்பட்டாற்போல மயக்கமின்றிப் பொருள்படும் கருவியாக அத்தொகைக்கு முன்னும் பின்னும் தொடர்பு செய்வர். எனவே, தொகுத்த சான்றோர்க்கும் அத் தொகை ஆகாது என்பது கருத்தாயிற்று. ஆகவே உருபு முதலிய விரியின்றாயின் வேறு பொருள்பட்டும் அதுவோ இதுவோ எதுவோ என்னும் ஐயம் தோன்றப் பல பொருள் பட்டும்