பக்கம் எண் :

262இலக்கணக் கொத்து 

மரவேலி -மரத்தைக் காக்கும் வேலி,
மரத்துக்கு வேலி,
மரத்தினது வேலி,
மரத்தின் புறத்து வேலி,
மரத்தானாகிய வேலி,
மரமாகிய வேலி,

சொற்பொருள் -சொல்லான் அறியப்படும் பொருள்,
சொல்லினது பொருள்,
சொற்குப் பொருள்,
சொல்லின்கண் பொருள்,
சொல்லும் பொருளும்,
சொல்லாகிய பொருள்,
சொல்லானது பொருள்.

என்று முறையே காண்க.] 7

தடுமாறு தொழில் தொகை

94தடுமா றுந்தொழில் தரும்தொகை சிலவே.

எ-டு:

புலி கொல் வீரன்,

பகைவர் தொழும் அரசன்,

வாளைமீன் உள்ளல் தலைப்படல்.

[வி-ரை: புலியைக்கொன்ற வீரன், புலியால் கொல்லப்பட்ட வீரன் - பகைவரைத்தொழும் அரசன், பகைவரால் தொழப்பட்ட அரசன் - வாளைமீனை - உள்ளல் தலைப்படல், வாளைமீனால் உள்ளல் தலைப்படப்படல் - என ஒரு சொல்லே ஒருகால் செயப்படுபொருளாயும் ஒருகால் எழுவாயாயும் தடுமாறி வருதல் காண்க. பகைவர் தொழும் அரசன் என்பதன் இரண்டாம் வேற்றுமைப் பொருட்பொருத்தம் ஆராய்தற்குரியது. இரண்டாம் உருபுவிரித்தற்கு அது ‘பகைவர்த்தொழுமரசன்’ என்றே இருத்தல் வேண்டும் என்பது.] 8