பக்கம் எண் :

116இலக்கணக் கொத்து 

[வி-ரை: ஆசிரியர் கருத்தைப் பட்டாங்கு உணர்தற்கண் உரைகள் மயக்கம் தருதலும் கூடும் ஆதலின் நூற்பாக்களை நோக்குக என்றார், ஓதல்பிரிவு பற்றி இறையனார் அகப்பொருள் உரை முதலியவற்றில் காண்க.] 9

நல்லோர்க்கும் அல்லோர்க்கும் இந்நூல் நண்ணின் நிகழுவன.

10நல்லோர் அல்லோர்க்கு இந்நூல் நண்ணின்
என்னினும் கடையார் உயர்ந்தார் இலர்என்று
இறுமாப்பு இன்றிஏற்று இகழாது இகழ்ந்து
நற்குலம் நற்குணம் நற்கலை நற்றவம்
உரையாரைப் பணிந்து பணியாது ஒழுகிப்
பழிபா வங்களைப் பயந்து தேடிப்
புண்ணியம் புகழ்களைப் போற்றிப் போக்கிப்
பிறப்புஇறப் புக்களில் பிழைத்துப் பிழைத்துப்
பசுவினைப் பாம்பின் இரைஅருத் தினர்க்குப்
பயன்கொடுப் பதுபோல் பயன்கொடுத் திடுவார்
ஆகையா னல்லோர்க்கு அளிக்குதல் அழகே.
 

இது நூல் உணர்த்துவோர்க்குச் சிலகருவி கூறுகின்றது. நல்லோர்க்கு அல்லோர்க்கு என்க. இந்நூல் - இதுபோலச் சிறப்புடைய நூல்கள். நண்ணில் - கைகூடில்.

‘நல்லோர்க்கு இந்நூல் நண்ணில் என்னினும் கடையார் இலர் என்று இறுமாப்பு இன்றி ஏற்று இகழாது நற்குலம் நற்குணம் நற்கலை நற்றவம் உடையாரைப் பணிந்து ஒழுகிப் பழிபாவங்களைப் பயந்து புண்ணியம் புகழ்களைப் போற்றிப் பிறப்பு இறப்புக்களில் பிழைத்துப் பசுவினை இரை அருத்தினர்க்கு பயன் கொடுப்பது போல் பயன் கொடுத்திடுவார் ஆகையால் நல்லோர்க்கு அளிக்குதல் வழக்கே.’