பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 10 117

என்னினும் கடையார் இலர் என்று கருதி, இறுமாப்பு இன்றி, உடையாரை இகழாது பணிந்து, பயந்து, போற்றிப் பிழைத்துக் கொடுப்பார் என்க.

[வி-ரை: பயந்து - அஞ்சி; போற்றி - பாதுகாத்து; பிழைத்து - அஞ்சி ஓடித் தப்பி.]

‘அல்லோர்க்கு இந்நூல் நண்ணின் எம்மின் உயர்ந்தார் இலர் என்று இறுமாப்பு ஏற்று இகழ்ந்து நற்குலம் நற்குணம் நற்கலை நற்றவம் உடையாரைப் பணியாது ஒழுகி, பழிபாவங்களைத் தேடிப் புண்ணியம் புகழ்களைப் போக்கிப் பிறப்பு இறப்புக்களில் பிழைத்துப் பாம்பினை இரையருத்தினர்க்குப் பயன் கொடுப்பது போல் பயன் கொடுத்திடுவார் ஆகையான் அல்லோர்க்கு அளிக்குதல் வழக்கே?

எம்மினும் உயர்ந்தார் இலர் என்று கருதி, இறுமாப்பு மேற்கொண்டு, உடையாரை இகழ்ந்து, பணியாது, தேடி, போக்கி, பிழைத்துக் கொடுப்பர் என்க.

[வி-ரை: போக்கி - நீக்கி; பிழைத்து - தவறு செய்து, நல்லோர்க்குக் கற்பித்தல் பசுவுக்கு இரை அருத்துதல் போல்வது. அல்லோர்க்குக் கற்பித்தல் பாம்பிற்கு இரை அருத்துதல் போலும், நல்லோர் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபெற்று வீடுபேற்றை நாடுவர். அல்லோர் பிறப்பு இறப்புத் துன்பங்களுக்கான தவறுகளைச் செய்து உலகில் உழல்வர்.]

பணிதலே விரதம், பணியாமையே விரதம் என்பது தோன்ற ‘ஒழுகி’ என்று வேண்டா கூறினம். அவை பயன் கொடுப்பினும் கொடுக்கும், இவர் பயன் கொடுத்தே விடுவர் என்பது தோன்றக் கொடுப்பர் என்னாது ‘இடுவர்’ என்றாம். ஈற்றடி ஒன்றும் இரட்டுறமொழிதல். இன்னும் பல கருவிகள் உள. அவை பலரும் விரித்தலின் விரித்திலம் என்க.

[வி-ரை:

‘பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து’                                         -கு.978