பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 8, 9203

‘போக்கு வரவிலி’ போக்கு வரவு புரிய’ ‘போக்கும் அது விளிந்தற்று’ (குறள் 332) ‘கள்ளன் போக்குக்காட்டி மீண்டான் என்பதுவும் அது.

போக்கு-தன்வினை அன்றோ எனின்,

‘கைவேல் களிற்றொடு போக்கி’                                     -கு. 774

‘போக்குமவன் போகாப் புகல்’

‘போக்கும் பொருளுண்டேல் ஒன்றாகப் போம்’

‘மகட் போக்கிய தாய்’

என்பதனால் அறிக.

[வி-ரை: போ-தன்வினை; போக்கு பிறவினை.

போக்கு வரவிலி முதலியன போதல் வரவுஇலி, போதல் வரவு புரிய, போதலும் அது விளிந்தற்று, கள்ளன் போதல் காட்டி மீண்டான் எனத் தன் வினையாகவே பொருள்படும். போக்கு பிறவினை என்பதனுக்குக் ‘கைவேல் களிற்றொடு போக்கி’ முதலியன எடுத்துக்காட்டு.

பிரயோக விவேகம் 35ஆம் காரிகையுரை,

‘தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்’                        -நாலடி 275

‘நட்பாடல் தேற்றாதவர்’                                            -கு, 187

என்புழித் தேறா ஒழுக்கம், தேறாதவர் எனும் பொருள்படுமால் எனின், இதனைப் பகுதிப்பொருள் விகுதி என்னும் சுவார்த்தத்தில் வந்த காரிதம் என்பர்’’ என்று கூறும்.] 8

தன்பிற பொதுவினை

73சொல்லால் தெரிவினை பொருளால் தெரிவினை
என்றுஇரு திறனே தன்பிற பொதுவினை.

எ-டு:

தீர்தல், தீர்த்தல், நடத்தல்;

ஆடின சாத்தன், ஆட்டின சாத்தன்;