பக்கம் எண் :

204இலக்கணக் கொத்து 

பிரி அமைச்சன், கெடு புத்தி, தேய் கட்டை, மீள்சினம், உரைகல் - இவைபோல்வன எல்லாம் சொல்லால் தெரிந்த தன்வினை, பிறவினை, பொதுவினை.

விண்ட தாமரை, விண்டபனை, விண்டநிலம்.

-இவைபோல்வன எல்லாம் பொருளால் தெரிந்த தன்வினை பிறவினை, பொதுவினை.

[வி-ரை: தீர்தல், ஆடின சாத்தன் - சொல்லால் தெரிந்த தன்வினை, தீர்த்தல், ஆட்டின சாத்தன் - சொல்லால் தெரிந்த பிறவினை, அவன் நடத்தல், பிரியும் அமைச்சன், கெடும் புத்தி, தேயும் கட்டை, மீளும்சினம், உரைக்கும் கல் - இவை சொல்லால் ஒருகால் தன்வினையாகப் பொருள்பட்டன. அவனை நடத்தல், பிரிக்கும் அமைச்சன், கெடுக்கும் புத்தி, தேய்க்கும் கட்டை, மீட்கும் சினம், உரைப்பிக்கும் கல் - இவை சொல்லால் ஒருகால் பிறவினையாகப் பொருள்பட்டன. அம்முறையில் இவை பொது வினையாயின.

விண்ட தாமரை - மலர்ந்த தாமரை - பொருளால் தெரிந்த தன்வினை.

விண்டபனை - விள்வித்த பனை - பொருளால் தெரிந்த பிற வினை.

விண்ட நிலம் - பிளந்த நிலம், விள்வித்த நிலம் - பொருளால் தெரிந்த தன்வினை பிறவினையாகும் பொதுவினை.] 9

மறையின் மூவகை

74மறைமூ வகையா வழங்குவர் புலவர்

எ-டு:

வாழ்வான் - வாழான், வாழ்வானல்லன், கெடுவான்;

கொடுப்பான் - கொடான், கொடுப்பானல்லன், வாங்குவான்;

புகழ்வான் - புகழான், புகழ்வானல்லன், இகழ்வான்;

-எனவரும் இவை முற்று.