பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 19227

வினை முற்றுப்பெயர் வகைகள்

83வினைமுற் றுப்பெயர் விரிக்குங் காலை
வினைமுதல் செயப்படு பொருளே கருவி
இடமே தொழிற்பெயர் இவ்வைந்து1 அன்றியும்
எட்டுஉருபு ஏற்றே எண்பொருள் ஆதல்2
ஈற்றயல் திரிதல்3 ஈரெச்சம் ஆதல்4
ஈறுஇகரம் ஆதல்5 அவ் ஈறுஇகரம் ஆயவை
வினைமுதல்செயப்படு பொருளொடு கருவி
இடம் வினை யெச்சமாய் இயங்குதல்6 அன்றியும்
இன்னும் பலவகை எனவிளம் புவரே.
 

[வி-ரை: வினைமுற்றுப்பெயர் எனப்படும் வினையாலணையும் - பெயர் - எழுவாய், செயப்படுபொருள், கருவி, இடம், தொழிற்பெயர் என உருபு ஏலாமலேயே அப்பொருட் கண் வரும். மேலும் எட்டு வேற்றுமை உருபுகளை ஏற்று அவ்வெண் வேற்றுமைப் பொருளாக வரும். மேலும் ஈற்றுஅயல் திரிதலும், பெயரெச்சமாதலும், வினையெச்சமாதலும் உண்டு. வினையாலணையும் பெயர் ஈறு இகரமாதலும் உண்டு. அங்ஙனம் ஈறு இகரமாகிய வினை முற்றுப் பெயர்கள் - வினைமுதல், செயப்படுபொருள், கருவி, இடம், வினையெச்சம் என்பனவாக வருதலும் உண்டு. வினை முற்றுப் பெயர் இன்னும் பலவகைப்படுதலும் உண்டு.]

வினைமுதல் ஆதி எடுத்துக் கூறிப் பின்னும் ஈரிடத்துக் கூறுதல் என்எனின், முன்னது உருபு ஏலாமலே அப்பொருள்படும்; நடுவது உருபு ஏற்றே அப்பொருள்படும்; பின்னது விகாரப்பட்டே அப்பொருள்படும் என்க.

1வினைமுதல் செயப்படு பொருளே கருவி
இடமே தொழிற்பெயர் இவ்வைந்து

எ-டு:

‘தார்தாங்கிச் செல்வது தானை’                                      - கு. 767

‘வினையே செய்வதுசெயப்படு பொருளே’                        - தொ. சொ. 112

‘உலகத்தார் உண்டென்பது இல்லென்பான்’                              கு. 850

- செல்வது, செய்வது, என்பான் என்பன வினைமுதல்.