பக்கம் எண் :

 ஒழிபியல் - நூற்பா எண். 17, 18279

பொற்பணி - ஆகப்பணி - [பொன், ஆடகம் - பெயர் ஒற்றுமை]

தொட்டான் - தீண்டினான் - [தொடு, தீண்டு - வினை ஒற்றுமை]

அதுவோ - அது கொல் - [ஓ, கொல் அடை ஒற்றுமை]

‘கறுப்பும் சிவப்பும்வெகுளிப் பொருள’ - தொ. சொ. 372 [கறுப்பு, சிவப்பு என்ற உரி ஒற்றுமை]

சிவன் நஞ்சுதின்றான்
அரன் விடம் உண்டான்
-[நிலை மொழியும் வருமொழியும் ஆன
தொடர் ஒற்றுமை]

என்று முறையே காண்க.

[வி-ரை: இவற்றைப் பரயோக விவேகநூலார், பொருள் வேறுபடாது சொல் வேறுபட்ட சரூபசிலிட்டம் என்று குறிப்பிட்டு, அஃது அது, இஃது இது, உஃது உது என எடுத்துக்காட்டுத்தந்து சுருங்கக் கூறியுள்ளார். - 40 உரை] 17

எழுத்துச்சாரியை

104ஓரெழுத் திற்கே ஒருசா ரியையும்1
ஓரெழுத் திற்கே பலசா ரியையும்2
பலஎழுத் திற்கே ஒருசா ரியையும்3
தொடர்ந்தபல் லெழுத்திற்கு ஒருசாரியையும்4
சாரியை இன்றித் தனித்தும்5தொடர்ந்தும்6
தொடர்பினுள் சாரியை கலந்து தோன்றியும்7
வரும்என மொழிப வழக்கறிந் தோரே.
 

எ-டு:

1. ‘வல்லெழுத் தென்ப கசட தபற’                               - தொ. எ. 19

‘மெல்லெழுத் தென்ப ஙஞண நமன’                              - தொ. எ. 20

‘இடையெழுத் தென்ப யரல வழள ’                              - தொ. எ. 21

- இவை பதினெட்டும் அச்சாரியை ஒன்றையே பெறும்.