எழுத்தொற்றுமை 103 | முப்பது எழுத்தும் முறையே ஒற்றுமை அன்றியும் கசவும் சயவும் வயவும் மனவும் லளவும் வலவும் அன்றியும் பின்னும் பலவாம் ஒற்றுமை என்ப.
|
‘அன்றி’ ஈரிடத்திற் கூறியது, முன்புள்ளது - இன்றுள்ளது - சொல்ஒற்றுமை மூவிதியும் பகுத்து அறிதற்கு என்க. எ-டு: அறுமுகம் - ஆறுமுகம் | - | உயிரில் அ ஆ ஒற்றுமை]
| மீற்கண் - மீன்கண் | - | [மெய்யில் ற, ன ஒற்றுமை]
| பிக்கை - பிச்சை | - | [ ’’ க, ச ’’ ] | பங்கசம் - பங்கயம் | - | [ ’’ ச, ய ’’ ] | கோவில் - கோயில் | - | [ ’’ வ, ய ’’ ] | கலம் - கலன் | - | [ ’’ ம, ன ’’ ] | அலமருகுயிலினம் அளமருகுயிலினம் - (சீவக. 49) | - | [ ’’ ல, ள ’’ ] | வில்வம் - வில்லம் | - | [ ’’ வ, ல ’’ ] |
‘இன்னும் பல’ என்றதனால், பகுதி முதல் ஐந்தும், பெயர் முதல் நான்கும், நிலைமொழியும் வருமொழியும் கொள்க. இயம்பினார் - விளம்பினார் - [பகுதியில் பொருள் ஒற்றுமை] உண்டனன் - உண்டான் - [சாரியை உண்மையும் இன்மையும் ஒற்றுமை] உண்ணாநின்றான் - உண்கின்றான் -[ஆநின்று, கின்று ஒற்றுமை] ஒன்றனை - ஒன்றினை - [அன், இன் சாரியை ஒற்றுமை] முட்டீது - முஃடீது கற்றீது - கஃறீது | - | [டகர ஆய்தம் றகர ஆய்தம் புணர்ச்சி ஒற்றுமை]
|
|