| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 87 |
| அறிய விதிகளை அறையின்அறி வார்இலை அதனால் அவையால் பயன்இலை; அதனால் பயன்படு விதிசில பகர்ந்தனன் என்க5 ; முன்னொரு பின்மலைவு உள்ளன போல வருவன எல்லாம் பிறர்மதம் ஆக்குக6 ! கூறின பின்னும் கூறின சில; அவை அநுவாதம் என்றே அறிந்தே அடக்குக7 ; தமிழ்விதிக்கு அகப்படாச் சிலவிதி சாற்றினன், அவைவட மொழிவிதி என்றே அறிக8 ; வேற்றுமை வினைஒழிபு எனமூன்று ஆக்கி அவற்றினுள் சொல்லினுள் சிலவிதி அடக்கி ஏனைநால் விதியும் இயம்பிலன் என்க9 ; பல்கால் பழகினும் தெரியா உளவேல் தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார் மூன்றினும் முழங்கும்; ஆண்டினும் இலையேல், வடமொழி வெளிபெற வழங்கும் என்க10 . |
இது இந்நூல் பார்த்தற்குச் சில கருவி கூறுகின்றது. அவை பத்து வியங்கோளும் என்க. யாதொரு முயற்சிக்கும் கருவி இன்றி முடியாது; கருவியும் ஏற்ற கருவியே அன்றி வேறு கருவி ஆகாது; உரிய கருவியும் ஒழுங்கு உடையதே யன்றி ஒழுங்கு இல்லாது ஆகாது; ஆகையால் இப்பத்தினையும் பல்கால் கூர்ந்து இந்நூலின் இறங்குக. பதவுரை எழுதின் பெருகும் ஆதலின் அரும்பதவுரை மாத்திரமே எழுதினம் என்க. மேலும் அதுவே. [வி-ரை: பத்து வியங்கோளாவன - வேறு விதி நவமாய் விளம்பிலன் என்க என்பது முதல் வடமொழி வெளிபெற வழங்கும் என்க என்பது ஈறாக அமைந்தன. இப்பத்து வியங்கோள்களும் இந்நூலினை ஐயம்திரிபு அற விளங்கிக் கோடற்குக் குறிப்பிடப்பட்ட ஒழுங்குடைய ஏற்ற சிறப்புக் கருவிகளாம் என்பது] 1 | வடமொழி இலக்கணம் சிலவகுத்து அறிந்து தொல்காப் பியத்தினும் தொல்காப் பியத்தினும் அருகிக் கிடந்ததைப் பெருக உரைத்தனன் வேறுவிதி நவமாய் விளம்பிலன் என்க, |
|