வடமொழி இலக்கணம் கடலே ஆதலின் சில வகுத்து அறிந்தேன் எனச் செப்பினனே, தொல்காப்பியம் முன்னது இலக்கணம். பின்னது பழைய செய்யுட்கள். சுருங்கிக் கிடந்ததைப் பெருக்கினன் என்பது முன்னூல்களையும் இந்நூலினையும் சீர்தூக்கின் தானே விளங்கும். ஒரு சொல்லாயினும், பொருளாயினும் புதிதாகச் சொற்றனன் அல்லன் என்பது ‘நவமாய்’ என்பதனால் அறிக. [வி-ரை: கடல்போலப் பரந்துகிடக்கும் வடமொழி இலக்கணத்துள் தமிழுக்கு மிக இன்றியமையாதனவாக முன்னோர் ஏற்றுக்கொண்ட சில இலக்கணங்களைமாத்திரம் பிரித்து எடுத்துக்கொண்டு தொல்காப்பியம் என்ற இலக்கண நூலிலும், பழைய தமிழ் இலக்கியங்களிலும் இலைமறைகாய்போல மறைந்து கிடந்த அரிய விதிகளை விளக்கிக் கூறினேனேயன்றி, யானே புதியனவாகப் படைத்து விதிகளை இந்நூலில் விளம்பினேன் அல்லேன் என்பது. குறிப்பிட்ட வடமொழிலிலக்கணச்செய்திகள் தமிழில் இலக்கண இலக்கிங்களுள் அவற்றைக் கண்டு கூறியனவே.] 2 | அ. | தொல்காப் பியம்திரு வள்ளுவர் ஆதிநூல் வடமொழி நியாயம் வந்தன சிலவே |
‘ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டுஇறந்து இசைக்கும் தொடர்மொழி’ - தொ.எ.45 ‘மூன்றுதலை யிட்ட முப்பதிற்று எழுத்து’ - தொ.எ.103 ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ கு.-1 ‘மதிநுட்பம் நூலோ டுடையார்க்(கு) அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை’ கு.-936 ‘நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு’ கு,-924 இவைபோல்வன வடமொழி நியாயம் வந்தன. |