| நூலமைப்பு : வேற்றுமையியல் | 11 |
இரண்டு எழுவாய்களைக் கொண்டே நிகழும் ஒரு வினைகளும் உண்டு. எழுவாய் கொண்டு முடியும் வினை ஏவுதல் வினை, இயற்றுதல் வினை, ஏவுதல் இயற்றுதல் என்ற இரண்டும் அல்லாத வினை மூவகைப்படும். விளிவேற்றுமை, படர்க்கையாரை முன்னிலைப்படுத்தி அழைத்தல் என்ற பொருளிலேயே வருவது. செயப்படுபொருள் - இதுகருத்துண்டாதல், கருத்தின்றாதல், உண்மையும் இன்மையும் ஆதல், இருவகைப்பட்டு ஈருருபு இணைதல் (ஆசிரியனை ஐயுற்ற பொருளை வினாவினான், பசுவினைப் பாலினைக் கறந்தான்), கருத்தாஆதல், அகநிலையாதல், தெரிநிலையாதல் (மாடம் செயப்பட்டது - தெரிநிலையாதல் வினைமுதல் உருபு ஏற்றும் செயப்படுபொருளே எனத்தெரியநிற்றல்) என்ற எழுவகைப்படும். இயற்றப்படுதல், வேறுபடுக்கப்படுதல், எய்தப்படுதல் முதலியனவும் இவ்வெழுவகையுள் அடங்கும். கருவி - இஃது அகக்கருவி, புறக்கருவி, ஒற்றுமைக்கருவி என மூவகைப்பட்டு மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வரும். இம் மூன்றாம் வேற்றுமைப்பொருளில் முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தகாரணம், காரகக்காரணம், ஞாபகக்காரணம் வினை (ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் மனத்தில் அச்செயல்பற்றி எழும் சங்கற்பம்) வேறுபாடு, கருத்தா, காலம் ஆகியவை வரும். கொள்வோன் - இப்பொருளில்வரும் நான்காம் வேற்றுமை - கேளாது ஏற்றல், கேட்டே ஏற்றல், ஏலாது ஏற்றல், ஈவோன் ஏற்றல், உயர்ந்தோன் ஏற்றல், இழிந்தோன் ஏற்றல், ஒப்போன் ஏற்றல், உணர்வு இன்றி ஏற்றல், விருப்பாய் ஏற்றல், வெறுப்பாய் ஏற்றல், வழக்கு, உரிமை, அச்சம், பாவனை ஆகிய செய்திகளைக் குறிக்கும். நீக்கம் - இப்பொருளில்வரும் ஐந்தாம் வேற்றுமை - இயங்குதிணை, நிலைத்திணை, பண்பு ஆகிய செய்திகளை இயம்பும். |