பக்கம் எண் :

128இலக்கணக் கொத்து 

கண் கால் முதலியன ஏழன்உருபுகள் என்பது உரையாசிரியர், நன்னூலார், நச்சினார்க்கினியர் முதலாயினார் கருத்து. ஏழன் பொருள்படும் பிறசொற்கள் என்பது சேனாவரையர் முதலாயினார் கருத்து. இவ்வாசிரியர் இவற்றை உருபு என்றே கொள்ளும் கருத்தினர்.]

வேற்றுமை உருபுகள்போல் வெளிப்படுவன

19வேற்றுமை உருபுகள் அல்லா தனவும்
வேற்றுமை உருபுகள் போல்வெளிப் படுமே.

எ-டு: பெண்ணை வளர்த்தான் - பெண்ணை : பனை.

காலை வணங்கினான் - காலை : காலைநேரம்.

மாலை வென்றான் - மாலை : மாலைநேரம்.

மாலை விரும்பினான் - மாலை : பூமாலை.

மாலை மயங்கினான் - மாலை : இயல்பு.

கோட்டை இழைத்தான் - கோட்டை : அரண்.

கோட்டை இணங்கினான் - கோட்டை : அரண்.

எண்ணொடு நின்று பிரிந்தது - எண்ணொடு: எண்ணும் பொருளில் வந்த ஒடு என்னும் இடைச்சொல்.

தலையோடு தகர்ந்தது - தலையோடு : மண்டையோடு.

ஊரான் ஓர் தேவகுலம் - ஊரான் : ஊர்தொறும்.

குலத்தான் ஒருவன் - குலத்தான் : குலத்தின்கண் - ஆன் சாரியை.

வேலொடு நின்றான் - வேலொடு : வேல் கொண்டு.

வீட்டிற்கு நல்வினை விரும்பிச்செய்தான் - வீட்டிற்கு : விடுதலை பெறுவதற்கு என்னும் செயற்கு என்னும் வினையெச்சவாய்பாடு.

உணற்கு வந்தான் - உணற்கு : செயற்கு என்ற வினையெச்சம்.

சித்திரைக்குப் போனான் - சித்திரைக்கு : இக்குச்சாரியை. சித்திரைத்திங்களில் போனான் என்பது பொருள்.