பக்கம் எண் :

   

வினையியல்

வினையியலுள் தனிவினை, தொடர்வினை, தன்வினை, பிறவினை, விதிவினை, மறைவினை, செய்வினை, செயப்பாட்டுவினை, தொழிற் பெயர், வினையாலணையும் பெயர், எச்சங்கள், பொதுவினை முதலியவை பற்றிய பலசெய்திகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

நட, வா முதலியன முதல்நிலைத் தனிவினைகளாம். அவை முதல்நிலைத் தொழிற் பெயர் - முன்னிலை ஏவல் ஒருமை முற்றுவேறு வினைமுற்று - இருவகை எச்சம் - அவ்வெச்சம் முற்று - என்பனவற்றில், முதல்நிலை பிரிந்த அம்முதல்நிலைத் தொழிற்பெயர் வினைமுதல் முதலாக வெவ்வேறு ஆதல் - எட்டு உருபுகளை ஏற்று எட்டுப்பொருள் ஆதல் - செயப்படுபொருள் குன்றலும் குன்றாமையும் ஆதல் - இடம் குன்றாமை - பலபொருட்கு ஒன்றேயாதல் - ஒரே பொருளுக்குப் பலவாதல் - இயல்பு பகுதியாதல் - திரிபு பகுதியாதல் - பொருட்பெயராயும் இடப்பெயராயும் வினையெச்சமாயும் வருதல் முதலிய பல நிலைகளில் சொற்றொடர்களிடையே பயன்படுத்தப்படும்.

முதல்நிலையோடு விகுதி முதலானவை கூடுதலால் அமையும் வினை தொடர்வினை எனப்படும் அத்தொடர்வினைகள் பகுதியோடு விகுதி இடைநிலை சாரியை சந்தி விகாரம் என்ற ஐந்தனுள் வேண்டியவை பொருந்தி வருதல், விகுதி முதலிய ஒன்றும் பொருந்தாமலேயே திரிந்து வருதல், திணைபால் இடம் பொழுது இவை சுட்டித் தொழிற்பெயராயும் முற்றாயும் பெயரெச்ச வினை யெச்சங்களாயும் தோன்றிச் சிறப்பு வினையாகவும் பொது வினையாகவும் வருதல், தன்வினை - பிறவினை - தன்வினை பிறவினைப் பொது - என்ற பகுப்பைப் பெறுதல், விதிவினை விதிமறை என்ற இரண்டற்கும் பொது என்ற