பகுப்பைப் பெறுதல், செய்வினை - செயப்பாட்டுவினை - செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் பொதுவினை என்ற பகுப்பைப்பெறுதல், முதல்வினை - சினைவினை - முதல் சினை என்ற இரண்டற்கும் பொது என்ற பகுப்பைப் பெறுதல், இருவகை எச்சத்தினுக்கும் பொதுவினையாதல், தெரிநிலை வினை, தெரிநிலை வினைக்குறிப்பு, தெரியாநிலை வினை, தெரியாநிலை வினைக்குறிப்பு, வினாக்குறிப்பு, பொதுவிற்கும் சிறப்பிற்கும் பொதுவாய் வருவன, முற்று, பெயரெச்சம், வினை எச்சம், விதிவினை, மறைவினை, பெயர், இயல்பாகிய சொல், திரிபு ஆகிய சொல், ஒருமொழி பழமொழிக்கு ஒப்பாய் நிற்றல் முதலிய பல பொருண்மைகளில் வரும். வினைச்சொற்கள் பெயர் வினை இடை உரி பண்பு முதலியவை அடியாகத் தோன்றும். அங்ஙனம் தோன்றும் வினைச் சொற்கள் முதல்நிலை, தொழிற்பெயர், முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்ற ஐந்து பகுப்பினுள் அடங்கும். முதல்நிலையைத் தனியே பிரித்துக்காண இயலாத நிலையில் பூசல், பட்டினி முதலிய தொழிற் பெயர்களும் வழங்குகின்றன. செய்வி என் ஏவல்வினையாகும் பிறவினை, முதல்நிலை திரிந்தும், திரியாமலும், வி-பி யாகவோ, பி-பியாகவோ, வி-பி இணைந்தோ - தனித்தோ அணையவும் தோன்றுவதாகும். செய்வி என்னும் ஏவல் வினை, சொல்லால் பிறவினையாயினும் பொருளால் தன்வினையாக வருதலும் உண்டு. வாழ்வான், வாழான் - வாழ்வானல்லன் - கெடுவான் என மறை மூவகையாக வழங்கப்படும். சில பெயர் வினைகளைத் தனித்தனியே விதி என்றோ மறை என்றோ கூற இயலாத நிலையும் உண்டு. மறை, நிலைமொழி மறை - வருமொழி மறை - இருமொழி மறை என மூவகைப்படும். விதிச்சொல் மறைப்பொருளாகியும் மறைச்சொல் விதிப் பொருளாகியும் வருதலோடு, விதிச்சொல்லின் முதல்நிலை மறைப் பொருளையும், மறைச்சொல்லின் முதல்நிலை விதிப்பொருளையும் தருதலும் இலக்கண ஆசிரியர் சிலரால் கொள்ளப்பட்டுள்ளது. |