| வேற்றுமையில் - நூற்பா எண். 38, 39 | 177 |
வேற்றுமை இயலுக்குப் புறனடை 64 | வேற்றுமை பலபல வாகத் தோன்றினும் வினைமுதல் முதலா விளம்பும்எண் பொருளின் ஒவ்வொரு பொருளே வெவ்வேறு ஆதலும் ஒவ்வொரு பொருளின் பலஉருபு வருதலும் உருபுகள் தமக்குஉரிப் பொருளையும் உதவி வேறு பொருளையும் சிலவிரும் புதலும் எனமூன் றுள்ளே எல்லா மடங்கும்.
| |
[வி-ரை: எண்பொருளுள் ஒவ்வொருபொருளேவெவ்வேறாதல் 25 ஆம் நூற்பா முதல் 43 ஆம் நூற்பா முடியக் கூறப்பட்டது. ஒவ்வொரு பொருளில் பலஉருபு வருதல் 44ஆம் நூற்பா முதல் 50 ஆம் நூற்பா முடியக் கூறப்பட்டது. உருபுகள் தமக்கு உரிய பொருளையும் உதவி வேறுபொருளையும் சில விரும்புதல் 51ஆம் நூற்பா முதல் 58ஆம் நூற்பா முடியக் கூறப்பட்டது.] தொல்காப்பியர் வேற்றுமைக்குப் பலபல விதிவிலக்கு வருதல் நோக்கி ஓரியல்கொள்ளாது வேற்றுமையியல் வேற்றுமை - மயங்கியல் விளிமரபு என மூவியல் கொண்டும் முழுதும் உரைத்திலர். வடநூல் வழியோ வரம்பின்றி ஓடும் என்பது தோன்றப் பல என்னாது, பலபல என்னாது, ‘பலபல எல்லாம்’ என்றாம். அங்ஙனமாயினும் இங்ஙனம் கூறிய மூன்றனுள்ளே மடங்கி அடங்கும் என்பது தோன்ற இரட்டுற மொழிந்தாம். [வி-ரை: நூற்பா முதலடியிலுள்ள பலபல என்ற தொடரோடு ஈற்றடியிலுள்ள எல்லாம் என்பதனையும் கூட்டிப் பலபல எல்லாம் எனக்கொள்க. ஈற்றடிக் கடையீருசீரை ‘எல்லாம் மடங்கும்’ எனவும், ‘எல்லாம் அடங்கும்’ எனவும் இரு வகையாகப் பிரித்துப் பொருள் செய்க.] 52 வேற்றுமையியல் முற்றும் |