பக்கம் எண் :

180இலக்கணக் கொத்து 

4ஆ.++முதல்நிலைத் தனிவினை வினையெச்சமாதல்

வரிப்புனைபந்து (முருகு. 68) - [வரி - வரிந்து]

அறுவேறு வகையின் (முருகு. 58) - [அறு - அற்று]

பாலறிவந்த (தொ.சொ. 162) - [அறி - அறிய]

சாக்குத்தினான் - சா - சாவ]

‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.’                                        - கு. 466
                                                [செய்தக்க - செய்யத்தக்க]

‘மண்மாண்புனை பாவை அற்று’.                                     - கு. 407
                                       [மாண்புனை - மாட்சிமைப்படப்புனை]

- இவை வரிந்து அற்று அறிய சாவ செய்ய மாட்சிமைப்பட என்று பொருள்பட்டு வினையெச்சமானது காண்க.

[வி-ரை: வரிப்புனைபந்து - வரிந்து புனை பந்து, அறுவேறு வகையின் - அற்று வேறு வகையின், பாலறிவந்த - பாலறிய வந்த, சாக்குத்தினான் - சாவக்குத்தினான், பொருதகர் - பொருத தகர், அடுபுலி - அட்டபுலி, சொற்பால் - சொல்லும் பகுதி, அறிகொன்று - அறிதலைக் கொன்று, கெடுவாகவையாது - கெடுதலாக வையாது எனப் பொருள்படுதல் காண்க. (பி.வி. 35 உரை).]

5அவ் வெச்சம் முற்றுக்களுள்,
முதல்நிலை பிரிந்தஅம் முதல்நிலைத் தொழிற்பெயர்
வினைமுதல் ஆதியா வெவ்வேறு ஆதல்

‘கால காலனைக் காண்கின்ற போது
காலனைத் துரத்தும்அக் காட்சி தானே.’

‘கால காலனைக் கரிசுஅறக் காண்கின்
காலனைத் துரத்தும்அக் காட்சி தானே.’

‘கால காலனைக் காண்கின் றார்தமக்கு
ஓர்வீடு அளிக்கும்அக் காட்சிஈது உண்மை.’

-இவற்றுள் மூன்றினும் நின்ற (காட்சி என்ற சொல்) முதல்நிலை பிரிந்து தொழிற்பெயராய் வினைமுதலான காண்க.


+ நன்னூல்317. முனிவர் உரை.