பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 2181

‘ஆதி’ என்றதனால்,

அக் காட்சியால் பயன் உண்டு;

அக் காட்சிக்கு இணை இல்லை;

இவை போல்வன (காட்சியால், காட்சிக்கு என்றாற் போலத் தொழிற்பெயர் உருபு ஏற்றல்) எல்லாம் கொள்க. முதல்நிலையுமன்றித் தொழிற்பெயர் பிரிந்து வினை முதலாதலும் கொள்க. அது,

‘இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.’                                           - கு. 352

- என்புழி மாசறு காட்சியவர்க்கு அக்காட்சி இன்பம் பயக்கும் என்பதனால் காண்க.

[வி-ரை: ‘‘இன்னும், ‘இருள் ... ... காட்சியவர்க்கு’ என் புழிக் காட்சியவர் என்னும் சாமானிய தத்திதனிற் காட்சி என்னும் பதம் பிரிந்து எழுவாயாய் நிற்பதும் கொள்க.’’ பி-வி. 35 உரை. பயக்கும் என்ற பயனிலைக்குக் காட்சி என்பதே எழுவாயாதல் காண்க.]

6முதல்நிலைத்தனிவினை,
எட்டுருபு ஏற்றே எண்பொரு ளாதல்

இவ்வுரை பெருகிற்று                                                      - உரை.

சொல்லைச் சேர்த்தான்                                                    - சொல்.

ஆயிரம் முடியை அவிழ்த்துநட்டான்                                          - முடி.

உரையால் அறிவித்தான்                                                   - உரை.

இச்சொற்குப் பொருள் இது                                                 - சொல்.

இவ்வுரைக்குச் சொல் இது                                                  - உரை.

மடியின் நீங்கி வாணிபம் செய்தான்                                           - மடி.

இச்சொல்லின் அறியலாம் இப்பொருள்                                       - சொல்.