5 | தொடர்வினை, விதிவினை மறைவினை இவை இருவினைப் பொது ஆகும்
|
உண்பான் - விதிவினை; உண்ணான் - மறைவினை; செய்யாய், செய்யீர், ‘மகன் எனல்’ ‘மக்கட்பதடி எனல்’ (கு. 196) அல்லும் பகலும் அருச்சிக்க யாமந்தொறும் வல்லார் வல்லார் மாட்டாதார்; வல்லார் திறைகொள்வர்; வல்லார் திறைகொடுப்பர்; அகல் விசும்பிலார்; அருளான், வெகுளான்; -இவை சொல் ஒன்றே விதியினையும் மறைவினையும் ஆயின. [வி-ரை: செய்யாய் - செய், செய்யாதே என இரு பொருளது. எனல் - என்று சொல்லுக, என்று சொல்லாதே என இரு பொருளது. வல்லார் - ஆற்றலுடையவர், ஆற்றலில்லவர் என இரு பொருளது. விசும்பிலார் - விசும்பை இருப்பிடமாக உடையவர், விசும்பில் இல்லாதவர் என இருபொருளது. அருளான் - அருள் உடையான், அருள் இல்லாதவன் என இருபொருளது. வெகுளான் - கோபிப்பான், கோபியான் என இரு பொருளது. |