[வி-ரை: தெரிநிலைவினை, தெரியாநிலைவினை என்று பகுப்பது வடமொழி மரபு. தெரியாநிலைவினை வினைக்குறிப்பில் அடங்கும் என்பது தமிழ்வழக்கு சாத்தன் அன்று குழையன் - குழையை உடையனாயிருந்தான் எனக் குறிப்பு முற்றாதல் காண்க.] யார், எவன், என், என்னை - இவை வினாவினைக்குறிப்பு; இனி, யார்-எவன் இவை வினாவினைக் குறிப்பாயின் பொதுவாம்; வினாப்பெயராயின் சிறப்பாம். ஆகையால் ஒரு சொல்லே பொதுவிற்கும் சிறப்பிற்கும் பொதுவாய் நிற்றல் காண்க. இவை மேல்வரும் வினை பெயர் தமக்கு வேறின்றாகும் உதாரணங்களுடனும் கூடும். [வி-ரை: யார் என்பது உயர்திணை முப்பாற்கும் பொதுவினை. எவன் என்பது அஃறிணை இருபாற்கும் பொதுவினை. எவன் என்பது என் என்றும் என்னை என்றும் என்ன என்றும் இக்காலத்து மருவிற்று. யாவர் என்ற பெயர் இடையிலுள்ள வகரம் கெட்டு யார் என்று ஆகியவழிப் பலர்பாற் பெயராம் யாவன் என்பதன் திரிபாகிய எவன் என்பது ஆண்பாற்பெயராம். யார், எவன் என்ற பொதுவினைகளும் சிறப்புப்பெயர்களும் வடிவால் ஒன்றாமேனும், வெவ்வேறு சொற்கள் என்பதே இலக்கண நூலார் பலருடைய கருத்தாகும்.] 14 | தொடர்வினை, வினைபெயர் தமக்கு வேறின்றாதல் ஆகும்
|
அந்தணனைக் கொன்றானை அரசன் கொன்றான் - முற்று - பெயராதல். ஓதுவான் வந்தான் உண்பான் போனான்
| வினையெச்சங்கள் பெயராயின.
|
பிறந்த இறந்தன பிறந்த சாத்தன் கண்ட அழிந்தன கண்ட கண் தின்ற அற்றன தின்ற வாய் வந்த போயின வந்த பொருள்
| தெரிநிலைப் பெயரெச்சங்கள் பெயராயின. |
|