பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 3195

‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்’                                   -வினையெச்சம்.

இருவினைக்குத் தக்க உடல் - குறிப்புப் பெயரெச்சம்.
-என முறையே முற்றும் வினையெச்சமும் பெயரெச்சமும் ஆகிய வினை பெயர் தமக்கு வேறின்றாய் ஒரு சொல்லாயே நிற்றல் காண்க.

[வி-ரை: ஓதுவான், உண்பான் என்ற வான் பான் ஈற்று வினையெச்சங்கள் வினையாலணையும் பெயராயின.

பிறந்த, கண்ட, தின்ற, வந்த, தக்க என்ற பெயரெச்சங்கள் வினையாலணையும் பெயராயின.

செய்தக்க - செய்யத்தக்க - வினையெச்சம் முதனிலைத் தொழிற் பெயராயிற்று.

வினைமுற்றுக்களே வினையாலணையும் பெயராயின என்பது இலக்கண ஆசிரியர் பலருக்கும் உடன்பாடு. வினையாலணையும் பெயருக்கு வினைமுற்றுப்பெயர் என்ற பெயர் அமைந்திருப்பதும் இக்கருத்துப் பற்றியேயாம்.]

15தொடர்வினை,
முற்றுஈ ரெச்சம் விதிமறை வினைபெயர்
இயல்பா கியசொல் திரிபா கியசொல்
ஒருமொழி பலமொழிக்கு ஒப்பாய்நிற்றல் ஆகும்

முற்று ஈரெச்சம் முதல் ஒப்பாய் நிற்றல்வரை ஒருபொருள்.

அது செய்யா என்னும் வாய்பாடு.

ஒன்றனையும் செய்யா ஓரறிவும் அற்ற பொருள்-இது முற்று.

செய்யாத சாத்தான் - இது விகாரப்பட்டுச் செய்யாச் சாத்தான் எனப் பெயரெச்சமாயிற்று.

செய்யாது வந்தான் - இது விகாரப்பட்டுச் செய்யாவந்தான் என வினையெச்சமாயிற்று.