செயப்பாட்டு வினைவகைகள் 78 | செயப்பாட்டு வினையினைச் செப்புங் காலை வினைமுதல் செயப்படு பொருளே தொழிற்பெயர் மூன்றின் பயனிலை யாயும்1 அவை யாயும்2 முதல்நிலை தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சம் வினைமுதல் செயப்படு பொருள்ஏழ் ஆதியுள் படுசொல் அற்றே படுபொரு ளாயும்3 அவைகள் படுசொல் அணைந்து வந்தும்,4 முற்று தொழிற்பெயர் முதலினுள் படுசொல் வரினும் படுபொருள் வருதல்இன் றாயும்,5 பெயர்ப்பின் வினைஎச் சத்தின் பின்னர்ப் படுசொல் வந்தே வேறுபொருள் பட்டும்,6 தன்பொருள் பிறபொருள் இவ்விரண் டற்கும் பொதுவாய்ப் படுசொல் பொருந்தி நின்றும்,7 படுசொல் வரப்படாப் படுபொரு ளாயும்,8 படுசொல் வந்தே படுபொரு ளாயும்,9 இன்னும் பலவாய் இயலும் என்ப.
| |
1,2 | செயப்பாட்டு வினையினைச் செப்புங்காலை வினைமுதல் செயப்படு பொருளே தொழிற்பெயர் மூன்றின் பயனிலை யாயும்அவை யாயும்இயலும்.
|
எ-டு: அரன் அருச்சிக்கப்பட்டான் [வினைமுதலின் பயனிலை] ஆடை தரப்பட்டது [செயப்படுபொருளின் பயனிலை] ஒழுக்கம் செய்ப்படும் [தொழிற்பெயரின் பயனிலை] -இவ்வாறு மூன்றின் பயனிலையாய் வந்தது காண்க. ‘அகடாரார் அல்லல் உழைப்பர் சூதென்னும் முகடியான் மூடப்பட்டார்.’ - கு. 936 [மூடப்பட்டார் - வினைமுதல்] |