பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 14209

‘இகழப் படுவாரைக் காணினும் இழுக்கே’

[இகழப்படுவார் - செயப்படுபொருள்]

‘‘இன்னாது இரக்கப் படுதல்’ - கு. 224

[இரக்கப்படுதல் - தொழிற்பெயர்]

செயப்பாட்டுவினை அம்மூன்றாய் வந்தது காண்க.

3முதல்நிலை தொழிற்பெயர் முற்றுஈ ரெச்சம்
வினைமுதல் செயப்படு பொருள்ஏழ் ஆதியுள
படுசொல் அற்றே படுபொரு ளாயும்இயலும்.

எ-டு:

செய்குன்று - செய்யப்பட்ட குன்று; முதல்நிலை படுசொல் அற்றுப் படுபொருளாயிற்று.

ஆண்டவன் என்றல் அரற்கே தகுமே. என்றல் - என்னப் படுதல்; தொழிற்பெயர் படுசொல் அற்றுப் படுபொருளாயிற்று.

மரம் வெட்டிற்று. வெட்டிற்று - வெட்டப்பட்டது; முற்று, படுசொல் அற்றுப் படுபொருளாயிற்று.

அரம் பொருதபொன் - (கு. 888) அரத்தால் பொரப்பட்ட பொன்; பெயரெச்சம் படுசொல் அற்றுப் படுபொருளாயிற்று.

எழுதிவந்தஓலை,‘யாழும் எழுதி எழில்முத்து எழுதி’ (கோவை. 79) எழுதப்பட்டு என வினையெச்சம் படுசொல் அற்றுப் படுபொருளாயிற்று.

இல்வாழ்வான் என்பான் - (கு. 41) இல்வாழ்வான் எனப் படுவான்; வினைமுதல் படுசொல் அற்றுப் படுபொருளாயிற்று.

ஊருணிநீர் (கு. 215) ஊராரால் உண்ணப்படுவதாகிய நீர்; செயப்படுபொருள் படுசொல் அற்றுப் படுபொருளாயிற்று.

‘ஆதி’ என்றதனால் எழுத்தாணி எழுதிற்று (எழுதப்பட்டது) - இது கருவி.