[வி-ரை: இனி, பிரயோகவிவேகம் 37ஆம் காரிகை உரையுள் ‘தாம்வீழ்வார்மென்தோள்’ (கு. 1103) ‘இல்வாழ்வான் என்பான்’ (கு. 41), ‘உடுப்பதூஉம் உண்பதூஉம்’ (கு. 166) என்னும் செயப்படுபொருளாய் நின்ற வினைமுற்றுப்பெயரும், முதல்நிலையும் வினையெச்சமும் பெயரெச்சமும் செயப்படு பொருளோடு முடியும் வினைமுற்றுப் பெயரும், செயப்பாட்டு வினையோடு தோன்றாதும் பொருள் உரைக்குங்கால் தம்மால் வீழப்படுவார், இல்வாழ்வான் எனப்படுவான், உடுக்கப்படுவது - எனச்செயப்பாட்டு வினையோடு தோன்றியும், செய்குன்று - செய்யப்பட்டகுன்று, அடுநறா - அடப்பட்ட நறா எனவும், ‘அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி’ - கு. 888 என்புழி, அரத்தால் பொரப்பட்டபொன் - உரம் பொரப்பட்டு - எனவும், திருக்கோவையாருள் ‘யாழும்எழுதி எழில்முத்து எழுதி’ (79) என்புழி, யாழும் எழுதப்பட்டு எழில் முத்தும் எழுதப்பட்டு எனவும், ‘யாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்’ - கு. 1123 என்புழி, எம்மால் வீழப்பட்ட திருநுதல் எனவும் படுசொல் இன்றாய்த் தோன்றிப் படுசொல் அணைந்து பொருள் பட்டவாறு காண்க’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதை நோக்குக.] 4 | அவைகள் படுசொல் அணைந்துவந்தும் இயலும்
|
செய்யப்படு குன்று - முதல்நிலை. ஆண்டவன் என்று சொல்லப்படுதல் அரற்கே தகுமே - தொழிற்பெயர். மரம் வெட்டப்பட்டது - முற்று. அரம் பொரப்பட்ட பொன் - பெயரெச்சம். எழுதப்பட்டு வந்த ஓலை, யாழும் எழுதப்பட்டு, |