பக்கம் எண் :

238இலக்கணக் கொத்து 

‘ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்,                                          - கு 653

யான் போகல் வேண்டும்;

நீ உணர்த்தல் வேண்டும்;

- என உயர்திணைப் பல்லோர்படர்க்கை தன்மை முன்னிலைக்கண் வருதலின் அன்று என்க.

இம்மூன்றும் ஒருபொருட் கிளவியாய்த் தொழிற்பெயராய்த் தேற்றப் பொருள்பட்டே நிற்கும் என்க. தேற்றப் பொருளாவது, இக்காரியம் செய்தலே-தக்கது, தகுதி, பொருத்தம், துணிவு, தெளிவு, நன்மை, அமைதி, முடிவு, வேண்டுவது; இக்காரியம் செய்யாமை-வழுவே, இழிவே, தீமையே, சிறுமையே, குற்றமே எனப் பொருள்படும்.

‘இனைத்தென அறிந்த சினைமுதற் கிளவிக்கு
வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்’                      - தொ.சொ.33

‘இன்னென வரூஉம் வேற்றுமை உருபிற்கு
இன்என் சாரியை இன்மை வேண்டும்’                            - தொ. எ. 131

‘நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்’                             - கு. 960

வேறுவினைப் பல்பொருள் தழுவிய பொதுச்சொலும்
‘வேறவற்று எண்ணும்ஓர் பொதுவினை வேண்டும்’                      - ந. 389

எனவும்,

இவரால் இக்காரியம் செய்யத் தகும்;

இக்கூழ் அருந்தத் தகும்;

இச்சோறு உண்ணத் தகும்;

இந்நீர் குடிக்கத் தகும்;

எனவும்,

‘முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்’                                           - கு. 824