பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 21239

‘இளையர் இனமுறையர் என்றிகழா நின்ற
ஒளியோ டொழுகப் படும்’                                          - கு 698

‘கற்றறிந்தோரைத் - தலைநிலத்து வைக்கப்படும்’                    - நாலடி 133

கீழ்களைச் செய்தொழிலால் காணப்படும்’                          - நாலடி 350

எனவும்,

இருவினைக்குத் தக்க உடல்;
உள்ளப்படுவன... ... ...
கொள்ளப்படாது மறப்பது அறிவில் என் கூற்றுக்களே’                -கோவை 87

எனவும் வரும். இங்ஙனம் வரும் செய்யுள்கட்கு எல்லாம் நச்சினார்க்கினியர், சேனாவரையர், பரிமேலழகர், உரையாசிரியர் முதலாயினார் முற்றாயும் எச்சமாயும் பொருள் உரைக்கின் வழுவாம் என்று கருதி, வியங்கோள் பொருட்டு என்றும், விதிப் பொருட்டு என்றும், தகுதிப் பொருட்டு என்றும், வேண்டுவது என்றும் தமக்கு வேண்டியவாறே பொருளெழுதிச் சொற்குணம் வாளா போயினர். (இப்பகுதி நன்னூல் 339ஆம் நூற்பா உரையுள் முனிவரால் எடுத்தாளப்பட்டுள்ளது.)

வேறு, இல்லை, உண்டு என்பனவற்றை நன்னூலார் விரித்தலின் விரித்திலம் என்கக (ந. 339) ஏனைய வெளி.

உண்டு என்பது முறை இறந்து தன்மை முற்றாயும், எச்சமாயும், உள் என்னும் முதல்நிலையாயும், பகுபதமாயும், உண்மை என்னும் தொழிற்பெயராயும், பகாப்பதமாயும், உண் என்னும் முதல் நிலையாயும் திரிதல் நோக்கி முதலினும் ஈற்றினும் திரிபு பட்டுக் கிடக்கச் (வேறில்லையுண்டியார்) சூத்திரம் செய்தனம்.

[வி-ரை: யார் - இல்லை - உண்டு - வேறு என்ற பொது வினைகளின் விளக்கமும் யார் என்பதன் எடுத்துக்காட்டுக்களும் 42ஆம் காரிகை உரையிலும், வேண்டும் - தகும் - படும் என்பனவற்றின் விளக்கங்களும் எடுத்துக்காட்டுக்களும் 41ஆம் காரிகை உரையிலும் பிரயோகவிவேக நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்நூல் காட்டிய எடுத்துக்காட்டுக்களில் ஈண்டும் சில கொள்ளப்பட்டுள்ளன.