தொல்காப்பியனார், ‘முன்னிலை வியங்கோள்’ (சொ. 224) என்ற நூற்பாவில் இன்மை செப்பல், வேறு என்பனவற்றைப் பொதுவினையாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் காலத்தில் உண்டு என்பது ஒன்றன்பால் நிகழ்காலவினை பிற்காலத்திலேயே அது பொதுவினையாயிற்று. அங்ஙனமேயே, யார் என்ற உயர்திணைப் பொதுக் குறிப்புவினையும், தொல்காப்பியர் காலத்துப் படர்க்கைக்கே வந்த வியங்கோளும் பிற்காலத்தில் பொதுவினையாயின. வினையெச்சமும் பெயரெச்சமும் பொது வினையாதலை அந்நூற்பாவிலேயே தொல்காப்பியனார் சுட்டியுள்ளார். பிரயோகவிவேகத்தை ஒட்டி இவர் பத்தினைப் பொதுவினை என்று விளக்கியுள்ளார்.] 21 வினையியற்குப் புறனடை 36 | வினைச்சொல் இலக்கணம் விளம்பில்அள வில்லை ஆயினும் ஐந்தனுள் அறிந்துஅடக் குகவே.
|
இது புறநடை; புறனடை என்பாரும் உளர். ஐந்தும் முற்கூறினாம். [புறத்தே நடத்தல் புறநடை; புறத்தே அடுத்தல் புறனடை.] எ-டு: ‘பேய்கண் டனையதொன் றாகிநின் றான்அப் பெருந்தகையே’ - கோவை 84 ‘தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்றுர்’ கு - 932 ‘புறம்குன்றி கண்டனைய ரேனும்’ கு - 227 எனவும், ‘மயில்கண் டன்ன மடநடை மகளிர்’ - முருகு 205 ‘சேய்கண் டனையன்’ - கோவை 84 எனவும், |